Thursday, May 22, 2008

பரபரப்பான இரண்டு ஆட்டங்களில் பெங், மொகாலி வெற்றி - IPL கிரிக்கெட்

21-05-2008 அன்று நடைபெற்ற இரண்டு IPL கிரிக்கெட் ஆட்டங்களும் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக அமைந்திருந்தது. அதன் முதல் ஆட்டத்தில் மொகாலி அணியும் மும்பை அணியும் மோதின. தொடர்ச்சியாக ஆறு ஆட்டங்களை வென்றிருந்த மும்பை அரை இறுதிக்கு தகுதி பெற இந்த ஆட்டம் முக்கியமானதாக இருந்தது. முதலில் பேட் செய்த மொகாலி அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் மார்ஷ் 89 ரன்களும், போமர்பேச் 79 ரன்களும் எடுத்தனர். இதைத் தொடர்ந்து ஆடிய மும்பை அணி 20 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 188 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மொகாலி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. (யுவராஜின் விரக்தி பார்க்க )

மற்றொரு ஆட்டத்தில் சென்னை அணியும், அரை இறுதிக்கு தகுதி பெற முடியாத பெங்களூரு அணியும் மோதின். முதலில் ஆடிய பெங்களுரு அணியின் பேட்டிங் மோசமாக இருந்தது. அந்த அணி 20 ஓவரில் 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராகுல் திராவிட் அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூரு அணியின் கும்ப்ளே 3 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.



அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் 46 ஆட்டங்களின் முடிவில் நெல்லை அணி தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றது. சென்னை அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. திருச்சி மூன்றாம் இடத்தையும், இம்சையின் கும்மி XI நான்காம் இடத்தையும் பெற்றுள்ளன.

0 comments: