Sunday, May 11, 2008

IPL கிரிக்கெட் - சென்னை வெற்றி - பாலாஜி ஹாட்ரிக் சாதனை

ஐ.பி.எல். டுவென்டி 20 கிரிக்கெட் தொடரில் சென்னையில் நடைபெறும் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், யுவராஜ்சிங் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதியதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஹாட்ரிக் சாதனை: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்று பீல்டிங் செய்ததை தொடர்ந்து, களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன் எடுத்தது. சென்னை அணியின் பத்ரிநாத் 64 ரன்களும், தோனி 60 ரன்களும் எடுத்தனர்.அதனை தொடர்ந்து பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 163 ரன் எடுத்து தோல்வியடைந்தது. அந்த அணியின் மார்ஷ் மட்டும் அதிகபட்சமாக 58 ரன்கள் எடுத்தார். இர்பான் பதான் 18 பந்துகளில் 40 ரன்கள் அடுத்தார். பாலாஜி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். கடைசி நேரத்தில் தொடர்ந்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இவர் ஹாட்ரிக் சாதனை படைத்தார். பாலாஜி 4 ஓவரில் 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். IPL கிரிக்கெட்டில் இது முதல் ஹாட்ரிக் என்பது குறிப்பிடத்தக்கது.


அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் 31 ஆட்டங்களின் முடிவில் நெல்லை அணி தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றது. சென்னை அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. திருச்சி மூன்றாம் இடத்தையும், இம்சையின் கும்மி XI நான்காம் இடத்தையும் பெற்றுள்ளன.

5 comments:

said...

பாலாஜிக்கு இது ஒரு பூஸ்ட் ஆக இருக்கும்.

said...

///வடுவூர் குமார் said...

பாலாஜிக்கு இது ஒரு பூஸ்ட் ஆக இருக்கும்.///
கண்டிப்பாக வ.குமார். வருகைக்கு நன்றி

said...

நம்ம பேவரேட் பாலாஜி மீண்டும் பந்து வீசி பல வெற்றிகள் பெற்று இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்க என் வாழ்த்துகள்.

Anonymous said...

///இலவசக்கொத்தனார் said...

நம்ம பேவரேட் பாலாஜி மீண்டும் பந்து வீசி பல வெற்றிகள் பெற்று இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்க என் வாழ்த்துகள்.///
இந்திய அணியில் இருந்து திறமை வாய்ந்த அல்லது அதிர்ஷ்டம் இல்லாத பல தமிழ்நாட்டு வீரர்கள் வந்து உடனே திரும்பி விடுகின்றனர். இனி அது போல் நடக்காமல் இருக்க வேண்டும். வருகைக்கு நன்றி கொத்ஸ்.

said...

///இலவசக்கொத்தனார் said...

நம்ம பேவரேட் பாலாஜி மீண்டும் பந்து வீசி பல வெற்றிகள் பெற்று இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்க என் வாழ்த்துகள்.///
இந்திய அணியில் இருந்து திறமை வாய்ந்த அல்லது அதிர்ஷ்டம் இல்லாத பல தமிழ்நாட்டு வீரர்கள் வந்து உடனே திரும்பி விடுகின்றனர். இனி அது போல் நடக்காமல் இருக்க வேண்டும். வருகைக்கு நன்றி கொத்ஸ்.