Saturday, August 30, 2008

மீன் பிடிக்கச் சென்றதால் ஆஸி அணியில் இருந்து சைமண்ட்ஸ் நீக்கம்

ஆஸ்திரேலியாவில் பங்களாதேஷ் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது. இந்த தொடருக்கான ஆஸி அணியில் சைமண்ட்சும் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் வர்வின் நகரில் சனி அன்று முதல் ஒருநாள் போட்டி நடைபெற உள்ள நிலையில், வெள்ளி அன்று ஆஸி அணியின் வீரர்களின் ஆலோசனைக் கூட்டமும், பின்னர் பயிற்சியும் நடப்பதாக இருந்தது.

வெள்ளிக் கிழமை காலையிலேயே டர்வின் நகரின் கடற்கரையில் மீன் பிடிக்க சென்று விட்டார் சைமண்ட்ஸ். இதனால் ஆஸி அனியின் நிர்வாகத்தினர் சைமண்ட்சை தொடரில் இருந்து நீக்கி, அவரை பிரிஸ்பேனுக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.

சைமண்ட்ஸ் இதே போல் பல தடவைகள் பிரச்சினைகளில் மாட்டி இருப்பது நினைவில் இருக்கலாம்.


தமிழ் பாடல்கள் - 3GP வீடியோ பார்மேட்டில் - செல் பேசிகளில் சுலபமாக பார்க்க

மீன் பிடிக்கச் சென்றதால் ஆஸி அணியில் இருந்து சைமண்ட்ஸ் நீக்கம்

ஆஸ்திரேலியாவில் பங்களாதேஷ் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது. இந்த தொடருக்கான ஆஸி அணியில் சைமண்ட்சும் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் வர்வின் நகரில் சனி அன்று முதல் ஒருநாள் போட்டி நடைபெற உள்ள நிலையில், வெள்ளி அன்று ஆஸி அணியின் வீரர்களின் ஆலோசனைக் கூட்டமும், பின்னர் பயிற்சியும் நடப்பதாக இருந்தது.

வெள்ளிக் கிழமை காலையிலேயே டர்வின் நகரின் கடற்கரையில் மீன் பிடிக்க சென்று விட்டார் சைமண்ட்ஸ். இதனால் ஆஸி அனியின் நிர்வாகத்தினர் சைமண்ட்சை தொடரில் இருந்து நீக்கி, அவரை பிரிஸ்பேனுக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.

சைமண்ட்ஸ் இதே போல் பல தடவைகள் பிரச்சினைகளில் மாட்டி இருப்பது நினைவில் இருக்கலாம்.


தமிழ் பாடல்கள் - 3GP வீடியோ பார்மேட்டில் - செல் பேசிகளில் சுலபமாக பார்க்க

Friday, August 29, 2008

இந்திய அணி 2009 மார்ச்சில் நியூசியில் சுற்றுப் பயணம்

இந்தியா- நியூசி., தொடர்: பி.சி.சி.ஐ., அறிவிப்புமும்பை: நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி ஒரு 'டுவென்டி-20', ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் என இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) அறிவித்துள்ளது. கடந்த 2002-2003ம் ஆண்டு நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் ஒரு 'டுவென்டி20' போட்டியில் வரும் 2009ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி மோதுகிறது. பிறகு மார்ச் 8 முதல் 20ம் தேதி வரை ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.


'டுவென்டி20 ஆட்டம் மார்ச் 6 ல் வெலிங்டன் நகரில் நடக்கின்றது.

முதல் ஒருநாள் போட்டி மார்ச் 8ல் நேப்பியரிலும், 2வது ஒருநாள் மார்ச் 11 ஹாமில்டனிலும், 3வது ஒருநாள் மார்ச் 14 ஆக்லாந்திலும், 4வது ஒருநாள் மார்ச் 17 வெலிங்டனிலும்,5வது ஒருநாள் மார்ச் 20 கிறிஸ்ட்சர்ச்சிலும் நடைபெறுகின்றது.

முதல் டெஸ்ட்மார்ச் 26-30 ஹாமில்டனிலும், 2வது டெஸ்ட் ஏப்.3-7 வெலிங்டனிலும் நடக்கின்றன.

ஒருநாள் போட்டிகள் பகலிரவு ஆட்டமாக நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி : தினமலர்

தமிழ் பாடல்கள் - 3GP வீடியோ பார்மேட்டில் - செல் பேசிகளில் சுலபமாக பார்க்க

இந்தியா- இலங்கை 5-வது ஒருநாள் கிரிக்கெட்: இலங்கை வெற்றி

இந்தியாவிற்கு எதிரான 5-வது ஒரு நாள் போட்டியில் டாஸில் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6விக்கெட்டுகளை இழந்து 227 ரன் எடுத்தது. இலங்கை அனியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தாலும் முபாரக்கும், துஷாராவும் இணைந்து மதிப்பான எண்ணிக்கையை எட்டினர்.

மழையினால் ஆட்டம் தடை பட்டதால் ஓவர்கள் குறைக்கபட்டு வெற்றி இலக்கு 216 ஆக நிர்ணயிக்கப்பட்து. இதனையடுத்து 216 ரன் வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி 26.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன்படி இலங்கை 112 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முக்கியத்துவம் இல்லாத இப்போட்டியில் தோற்றாலும் 3-2 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றி ஐடியா கோப்பையை வென்றது.

தமிழ் பாடல்கள் - 3GP வீடியோ பார்மேட்டில் - செல் பேசிகளில் சுலபமாக பார்க்க

ஐ.சி.சி., ரேங்கிங்: தோனி 'நம்பர்-1'

ஐ.சி.சி., ஒரு நாள் பேட்ஸ்மேன்களுக்கான புதிய ரேங்கிங் பட்டியலில் இந்திய கேப்டன் தோனி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நேற்று ஒரு நாள் போட்டிகளுக்கான புதிய ரேங்கிங் பட்டியலை வெளியிட்டது. பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில் இந்திய கேப்டன் தோனி முதலிடம் பிடித்துள்ளார். இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அசத்தி வரும் இவர் 803 புள்ளிகள் பெற்றுள்ளார்.

தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித் 2வது இடத்துக்கு பின்தள்ளப் பட்டுள்ளார். மூன்றாவது இடத்தை ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் தன்வசம் வைத்துள்ளார். சச்சின் 728 புள்ளிகளுடன் 9வது இடத்தை பிடித்துள்ளார். பார்ம் இல்லாமல் தவித்து வரும் யுவராஜ் 18வது, காம்பிர் 27வது இடத்தில் இருக்கின்றனர்.





பவுலர்களுக்கான ரேங்கிங்கில் முதல் மூன்று இடங்களை ஆஸ்திரேலியாவின் நாதன் பிராக்கன், நியூசிலாந்தின் வெட்டோரி, ஷேன் பாண்ட் பிடித்துள்ளனர். "டாப்-20' வீரர்கள் வரிசையில் ஜாகிர் கானை தவிர்த்து வேறு எந்த இந்திய வீரரும் இல்லை. இவர் 14வது இடத்திலிருக்கிறார்.

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை 3-1 என வென்ற போதும் இந்திய அணி (114) தொடர்ந்து 4வது இடத்திலேயே இருக்கிறது.

செய்தி : தினமலர்

Wednesday, August 27, 2008

ஐடியா கோப்பை- இந்திய அணி வென்றது - வாஸ் சாதனை

இந்தியா-இலங்கை இடையேயான 4-வது ஒரு நாள் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 49.4 ஓவரில் 258 ரன் எடுத்தது. இந்திய அணியின் ரெய்னா 76 ரன்களும், தோனி 71 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணியின் துசாரா 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதனைதொடர்ந்து 259 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாட தொடங்கிய இலங்கை அணி 46.3 ஓவரில் 212 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இலங்கை அணியின் ஜெயசூர்யா 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணியின் ஹர்பஜன் 3 விக்கெட்களையும், முனாப் பட்டேல், யுவராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், இதனையடுத்து இந்திய அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஐடியா கோப்பை ஒரு நாள் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது.




இந்திய அணியின் சுரேஷ் ரெய்னா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வாஸ் சாதனை

இன்றைய போட்டியில் யுவராஜ் சிங்கின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இலங்கை அணியின் சமிந்தா வாஸ் 400 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் பெற்றார்.

Sunday, August 24, 2008

இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா வெற்றி

கொழும்பு: இந்தியா-இலங்கை இடையேயான 3-வது ஒரு நாள் பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 50ஓவரில் 237 ரன் எடுத்தது. இந்திய அணியின் ரெய்னா 53 ரன்களும், தோனி 76 ரன்களும் எடுத்தனர். மெண்டீஸ் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதனைதொடர்ந்து 238 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாட தொடங்கிய இலங்கை அணி 49 ஓவரில் 204 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இலங்கை அணியின் ஜெயவர்த்தனா 94 ரன்கள் எடுத்து போராடி ஆட்டமிழந்தார். இந்திய அணியின் ஜாகீர் கான், முனாப் பட்டேல் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், இதனையடுத்து இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒரு நாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.




இந்திய அணியின் தோனி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Friday, August 15, 2008

யுவராஜ் சிங் 172 ரன்கள் - இந்திய அணி வெற்றி

இந்திய இலங்கை அணிகளுக்கு இடையே வரும் ஆகஸ்ட் 18 ந்தேதி ஒருநாள் ஆட்டங்கள் தொடங்க உள்ளன. இந்நிலையில் இன்று இலங்கை XI அணிக்கு இந்திய அணிக்கும் மாதிரி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்திய அணி தனது முழு வீரர்களுடன் களம் இறங்கியது. இலங்கை அணியில் தரங்கா, வர்ண்பூரா, கபூகேதரா, சமரா சில்வா ஆகிய முக்கிய வீரர்கள் ஆடினர்.

டாள் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. இந்திய அணியின் சார்பில் யுவராஜ் சிங் அதிகபட்சமாக 121 பந்துகளில் 172 ரன்கள் எடுத்தார். இதில் 13 சிக்சர்களும், 8 போரும் அடங்கும். இதனைத் தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 50 ஓவரில் 250 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முபாரக் 60 ரன்களும், தரங்கா 50 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணியில் சீனியர் வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் சொதப்பிய நிலையில் ஒருநாள் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தும் என நம்பலாம்.

Friday, August 8, 2008

ஒருநாள் கிரிக்கெட் - இந்திய அணி அறிவிப்பு - சச்சின், கோகிலுக்கு வாய்ப்பு

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் அடுத்த மாதம் பாகிஸ்தானில் நடக்க உள்ள சாம்பியன்ஸ் டிராபிக்கான(மினி உலககோப்பை) இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மூன்று டெஸ்ட் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இவ்விறு அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் நாளை கொழும்புவில் துவங்குகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 18ம் தேதி துவங்குகிறது. இதற்கான இந்திய வீரர்கள் தேர்வு மும்பையில் நடந்தது. ஒருநாள் போட்டிக்கான அணியின் காயம் காரணமாக கடந்த வங்கதேச தொடர் மற்றும் ஆசிய கோப்பை தொடரில் விளையாடாத சச்சின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மூத்த விரர்களான கங்குலி, டிராவிட், லட்சுமண் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை. ஐ.பி.எல்., தொடரில் ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்த விவகாரத்தால் தடை செய்யப்பட்டிருந்து ஹர்பஜன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் அறிமுக வீரராக டில்லியின் விராத் ஹோஹ்லி சேர்க்கப்பட்டுள்ளார். சுழற்சி அடிப்படையில் இஷாந்த் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு முனாப் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஸ்ரீசாந்த் நீக்கப்பட்டுள்ளார். அடுத்த மாதம் பாகிஸ்தானில் நடக்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி(மினி உலககோப்பை) தொடருக்கான இந்திய அணியும் இன்று அறிவிக்கப்பட்டது. இதில் சுரேஷ் ரெய்னா, விராத் ஹோஹ்லி, ரோகித் சர்மா, பிரவீண் குமார் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் இஷாந்த் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


அணி விவரம்: இலங்கை தொடருக்கு: தோனி(கேப்டன்), யுவராஜ்(துணை கேப்டன்), சேவக், காம்பிர், சச்சின், ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன், விராத் ஹோஹ்லி, ஜாகிர் கான், பிரவீண் குமார், ஆர்.பி. சிங், பிராயகன் ஓஜா, இர்பான் பதான், பார்த்திவ் படேல், முனாப் படேல்.


சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு: தோனி(கேப்டன்), யுவராஜ்(துணை கேப்டன்), சேவக், காம்பிர், சச்சின், ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன், விராத் ஹோஹ்லி, ஜாகிர் கான், பிரவீண் குமார், ஆர்.பி. சிங், பிராயகன் ஓஜா, இர்பான் பதான், இஷாந்த் சர்மா.

செய்தி : தினமலர்

Sunday, August 3, 2008

இங்கி. கிரிக்கெட்டில் பரபரப்பு - வாகன், காலிங்வுட் ராஜினாமா

இங்கிலாந்து அணியில் டெஸ்ட் கேப்டனும், ஒருநாள் கேப்டனும் ஒரே நாளில் ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி படுதோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து தோல்விகளுக்கு பொறுப்பேற்று அந்த அணியின் டெஸ்ட் கேப்டன் மைக்கேல் வாகன் தனது டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.




அதே போல் ஒருநாள் போட்டிகளில் காலிங்வுட் கேப்டனாக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் நடைபெற்ற நியூசிலாந்துக்கு இடையேயான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 1-3 என்ற கணக்கில் சொந்த மண்ணில் படுதோல்வி அடைந்தது. இதனாலும், தனது ஆட்டத்திறன் கேப்டன் பொறுப்பால் பாதிக்கப்படுவதாகவும் கூறி காலிங்வுட் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். ஒரே நாளில் இரண்டு கேப்டன்களும் ராஜினாமா செய்தது இங்கிலாந்து கிரிக்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான டெஸ்ட் இன்னும் ஒன்று இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த கடைசிப் போட்டி வரும் 7 ம்தேதி தொடங்குகின்றது. அந்த போட்டிக்கு பீட்டர்சன் தலைமை வகிப்பார் என்று தெரிகின்றது.

இலங்கையை வீழ்த்தி தொடரை சமன் செய்தது இந்தியா


காலி: காலி நகரில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் 170 ரன்கள் வித்தியாசத்தில், இந்தியா வீழ்த்தி, டெஸ்ட் தொடரை சமன் செய்தது.

காலி டெஸ்ட் போட்டியில் இந்தியா வீரேந்திரஷேவாக்கின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸில் 329 ரன்களைக் குவித்தது.

பின்னர் ஆடிய இலங்கை 292 ரன்களில் சுருட்டப்பட்டது. இதையடுத்து 37 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா தனது 2வது இன்னிங்ஸைத் தொடங்கியது. இதில், கம்பீர், ஷேவாக், ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், இந்தியா 269 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 307 ரன்கள் எடுத்தால்வெற்றி என்ற இலக்குடன் இலங்கை தனது 2வது இன்னிங்ஸைத் தொடங்கியது. ஆனால் இந்திய சுழற் பந்து வீச்சையும், வேகப்பந்து வீச்சையும் சமாளிக்க முடியாமல் இலங்கை வீரர்கள் மடமடவென சரிந்தனர்.

குறிப்பாக ஹர்பஜன் சிங் மற்றும் இஷாந்த் சர்மாவின் பந்து வீச்சு இலங்கையை முறித்துப் போட்டு விட்டது.

சமர வீரா, தில்ஷானைத் தவிர மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். சமர வீரா 67 ரன்களை சேர்த்தார். தில்ஷான் 38 ரன்கள் எடுத்தார். இறுதியில்,136 ரன்களுக்கு இலங்கையை சுருட்டி 170 ரன்களில் இந்தியா அபார வெற்றியைப் பெற்றது.

ஹர்பஜன் சிங் நான்கு விக்கெட்களையும், இஷாந்த் சர்மா 3 விக்கெட்களையும், கும்ப்ளே 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஜாகிர் கானுக்கு ஒரு விக்கெட் கிடைத்தது.

ஆட்ட நாயகனாக வீரேந்திரஷேவாக் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகளைக் கொண்ட தொடரை இந்தியா 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.