Monday, March 31, 2008

எய்ட்ஸ் நலநிதிக் கிரிக்கெட் போட்டி - அறிவிப்பு

இது ஒரு வித்தியாசமான கிரிக்கெட் போட்டி. உங்களது வேலை 11 பேர் கொண்ட ஒரு கிரிக்கெட் அணியை அறிவிக்க வேண்டியது மட்டுமே. அதன் பின் ஹாயாக அமர்ந்து ஆட்டத்தை ரசிக்க வேண்டியது தான். ஒரு பைசாவும் செலவு இல்லாமல் ஒரு அணியை வாங்கி ஆடவிடக் கூடிய ஆட்டம். ஏப்ரல் 18 முதல் சூன் 1 வரை நடைபெறும் IPL முடிவுகளைப் பொறுத்து இந்த போட்டியின் முடிவு அமையும். உங்களது அணியை எதிர்த்து ஆட இருப்பது நமது சக பதிவரின் அணியே!

அணியைத் தேர்ந்தெடுக்கும் முறை

1. ஒவ்வொரு பங்கேற்பாளரும் தனது சார்பாக IPL கிரிக்கெட்டில் ஆடும் வீரர்களில் 11 பேர் கொண்ட அணியை தெரிவிக்க வேண்டும்.
2. 8 அணியில் இருந்தும் நாங்கள் தரும் பட்டியலில் இருந்து 4 மட்டையாளர்களையும், 4 பந்துவீச்சாளர்களையும், 2 ஆல்-ரவுண்டர்களையும் 1 விக்கெட் காப்பாளரையும் தேர்ந்தெடுக்க வேண்டும். (பட்டியல இங்கே)
3. 5 மட்டையாளர் 3 பந்து வீச்சாளர் போன்றவை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
4. தத்தமது அணிக்கு ஒரு தமிழ் பெயரையும் சூட்டலாம். அது உங்களது பெயராகக் கூட இருக்கலாம்.
5. 11 பேரில் இருந்து ஒருவரை அணித்தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும்
6. ஒரே நாட்டைச் சேர்ந்த வீரர்களையோ, அல்லது கலந்தோ தேர்ந்தெடுக்கலாம்.

வெற்றி பெறும் முறை
1.ஏப்ரல் 18 முதல் சூன் 1 வரை நடைபெறும் IPL ஆட்டங்களில் வீரர்கள் எடுக்கும் ஸ்கோரை வைத்து மதிப்பெண்கள் இடப்படும்.
2. ஒரு ரன்னுக்கு ஒரு மதிப்பெண்ணும், ஒரு விக்கெட்டிற்கு 20 மதிப்பெணும், ஒரு கேட்சிற்கு 5 மதிப்பெண்ணும் வழங்கப்படும்.
3. விக்கெட் காப்பாளருக்கு ஸ்டெம்பிங்குக்கு 5 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
4. ரன் அவுட்டுக்கு மதிப்பெண் கிடையாது
5. அணித்தலைவரின் மதிப்பெணுக்கு இரட்டிப்பு மதிப்பெண் வழங்கப்படும்.
( எ.கா : ஒரு ஆட்டத்தில் ஒரு வீரர் 25 ரன் எடுத்து, இரண்டு விக்கெட்டை வீழ்த்தி, இரண்டு கேட்ச்சும் பிடித்திருந்தால் ( 25+(2*20)+(2*5)=) 75 மதிப்பெண் கிடைக்கும். இதே அணித்தலைவருக்கு 150 மதிப்பெண்ணாகி விடும்.)
7. மழை இன்ன பிற காரணங்களால் ஆட்டம் தடை பெற்றால் அதுவரை ஆடப்பெற்ற ஆட்டத்தின் மதிப்பில் மதிப்பெண்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

கவனிக்க வேண்டியவை
1. நீங்கள் தமிழில் ப்ளாக் எழுதக் கூடியவர்களாக இருக்க வேண்டும்
2. உங்கள் அணி வெற்றி பெற்றால் பரிசுத் தொகையை எய்ட்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உங்கள் பெயரில் வழங்கப்பட்டு ரசீது உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விபரம் இங்கே
3. பரிசுத் தொகை முழுவதும் பதிவரின் சொந்த பணமே
4. உங்களது அணியை அறிவிக்கக் கடைசி நாள் ஏப்ரல் 15 2008
5. உங்களுடைய 11 வீரர்கள் கொண்ட அணியை உங்கள் பதிவில் இட்டு இங்கு பின்னூட்டமாகத் தெரிவிக்க வேண்டும், அல்லது இங்கு பின்னூட்டத்தில் கூட தெரிவிக்கலாம்,
6. ஏப்ரல் 15 வரை அதை மாற்றி அமைத்துக் கொள்ள உங்களுக்கு அவகாசம் உள்ளது.
7. ஏப்ரல் 16 அன்று ஒவ்வொரு அணியின் விபரமும் இங்கு வெளியிடப்படும். அதில் தவறு இருந்தால் ஏப்ரல் 17 க்குள் தெரிவிக்க வேண்டும்.
8. ஏப்ரல் 19 முதல் IPL போட்டியில் வீரர்களின் ஆட்ட முடிவுகளைப் பொறுத்து உங்களது அணிக்கு மதிப்பெண்கள் அளிக்கப் பட்டு இங்கு வெளியிடப்படும்.
7. உங்களது அணியின் ஒரு ஆட்டக்காரர் எந்த காரணத்தினாலோ விளையாடவில்லையென்றால் அதற்குப் பதிலாக வேறொருவரை சேர்க்க இயலாது. எனவே ஏப்ரல் 15 க்கு முன் கவனமாக உங்களது ஆட்டக்காரரைத் தேர்ந்தெடுங்கள்.

ஒரு மாதிரி ஸ்கோர் போர்டு இங்கே


இதே போல் ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு இங்கு வெளியாகும். அதிக மதிப்பெண் பெற்ற அணி வெற்றி பெறும். பங்குகொள்ள உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இதைப் படிப்பவர்கள் தங்களது பங்களிப்பைத் தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். Best of Luck
போட்டியில் உள்ள அணி
1. இம்சையின் கும்மி XI

14 comments:

Anonymous said...

பங்கு பெறுபவர்களுக்கு வாழ்த்துக்கள்

said...

வழக்கம் போல இந்த போட்டியிலும் மொத ஆளா மட்டும் கலந்துக்கரேன்.... நம்ம அணி பேரு கும்மி XI
1.டெண்டுல்கர் (Bt)
2.ஹெய்டன் (Bt)
3.கிரேம் ஸ்மித் (Bt)
4.சைமண்ட்ஸ் (Bt)
5.ஜாக் காலிஸ் (AllR / Captain)
6.அஃப்ரிடி (AllR)
7.பிரட் லீ (Bo)
8.கும்ளே (Bo)
9.டேல் ஸ்டெய்ன் (Bo)
10.முரளிதரன் (Bo)
11.கில் கிரிஸ்ட் (WK)
தோனி (12)
ரோகித் சர்மா (13)
சேவாக் (14)
யுவராஜ் சிங் (15)
கங்கூலி (16)
டிராவிட் (17)
மிஸ்பா (18)
டேவிட் ஹஸ்சி (19)

எல்லா அணிலயும் 19 பேர் இருக்காங்க அதான் இதிலயும் 19.

ஆமா தோனிய ஏன் கீப்பரா அறிவிக்கல.

said...

இம்சை நன்றி. உங்கள் அணியின் முதல் 11 பேர் மட்டுமே போட்டியில் இருப்பார்கள். தோனி சென்னை அணியின் கேப்டன், பேட்ஸ்மேனாக மட்டுமே செயல்படுவார். கீப்பர் வேறு நபர்.

said...

தூள் கெளப்புங்க!
டாஸில் வென்றது இம்சையா? :-))

Anonymous said...

பெளலர் அடிக்கும் ரன்னுக்கும், பேட்ஸ்மேன் எடுக்கும் விக்கெட்டுக்கும் மதிப்பெண் உண்டா? பு.விளக்கவும்

said...

///Anonymous said...

பெளலர் அடிக்கும் ரன்னுக்கும், பேட்ஸ்மேன் எடுக்கும் விக்கெட்டுக்கும் மதிப்பெண் உண்டா? பு.விளக்கவும்///
அனானி நண்பரே, மாதிரி ஸ்கோர் போர்டைப் பார்த்தாலே விளங்குமே? மதிப்பெண்கள் கண்டிப்பாக உண்டு.

said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
தூள் கெளப்புங்க!
டாஸில் வென்றது இம்சையா? :-))

ஹிஹிஹி இப்படி வெற்றி பெற்றால் தான் உண்டு

said...

:(
பதிவர்களின் ஆதரவு கிடைக்காததால் (இம்சை தவிர) இம்சையுடன் போட்டி இட தமிழ் கிரிக்கெட் பதிவின் அணியே தனது அணிகளை அறிவிக்க உள்ளது. பரிசுத் தொகை முழுவதும் இம்சையின் பெயருக்கே அளிக்கப்படும்.

Anonymous said...

1.ராகுல் திராவிட்
2.மார்க் பெளச்சர் (வி.கீ)
3.தோனி
4.ஹர்சல் கிப்ஸ்
5.யுவராஜ் சிங்
6.ஜெயசூர்யா(ஆ.ர)
7. அப்ரிதி (ஆ.ர) கேப்டன்
8.டேல் ஸ்டையின்
9.முகமது ஆசிப்
10.இஷாந்த் சர்மா
11.ஷான் போலாக்

Anonymous said...

1. ஜாக் கல்லிஸ் (கேப்டன்)
2. ஸ்ரீகாந்த அனுருத்தா
3. ஆடம் கில்கிறீஸ்ட் (வி.கீ)
4. ஹெய்டன்
5. சேவாக்
6. ஸ்காட் டைரிஸ் (ஆ.ர)
7. இர்பான் பதான் (ஆ.ர)
8. கும்ப்ளே
9. பிரவீன் குமார்
10. டேனியல் விட்டோரி
11. உமர் குல்

Anonymous said...

1. சச்சின் டெண்டுல்கர்
2. மெக்கெல்லம் (வி.கீ)
3. கம்ரான் அக்மல்
4. ஜெயவர்தனே
5. தில்சான்
6. சைமன்ட்ஸ் (ஆ.ர)(கேப்டன்)
7. ஜேகப் ஓரம்(ஆ.ர)
8. சமிந்தா வாஸ்
9. ஷேன் வார்னே
10. ரமேஷ் பவார்
11. மெக்கிராத்

Anonymous said...

1. விராத் கோகில்
2. குமார் சங்க்காரா
3. கவுதம் கம்பீர்
4. கிரீம் ஸ்மித்
5. அப்ரிதி (ஆ.ர) கேப்டன்
6. கல்லிஸ் (ஆ.ர)
7. மெக்கல்லம்
8. ஸ்ரீசாந்த்
9.முரளிதரன்
10. பிரவீன் குமார்
11. ஷேன் வார்னே

Anonymous said...

1. ராபின் உத்தப்பா
2. முகமது கைப்
3. ரிக்கி பாண்டிங்
4. பிளமிங்
5. சைமண்ட்ஸ் (ஆ.ர) கேப்டன்
6. கல்லிஸ் (ஆ.ர)
7. மார்க் பெளச்சர் (வி.கீ)
8. பிரட் லீ
9. ஜாகீர் கான்
10. ஹர்பஜன் சிங்
11. விட்டோரி

Anonymous said...

சேலம் சிறுத்தைகள் said...

1. கிரிஸ் கைல்
2. ஹைடன்
3. கங்குலி
4. லக்ஷமன்
5. அப்ரிதி (ஆ.ர)
6. கல்லிஸ் (ஆ.ர) கேப்டன்
7. ஆடம் கில்கிறிஸ்ட் (வி.கீ)
8. இஷாந்த் சர்மா
9. பிரட் லீ
10. முரளிதரன்
11. கும்ப்ளே