Thursday, May 8, 2008

தோனிக்கு மேன் ஆப் த மேட்ச் ------ என்னப்பா நியாயம்?

இன்று நடைபெற்ற சென்னை - டெல்லி இடையேயான IPL கிரிக்கெட்டின் ஆட்டத்தில் சென்னை வெற்றி பெற்றது. விறுவிறுப்பான ஆட்டத்தில் கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவையான நிலையில் கடைசி பந்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. இது சென்னை அணியின் ரசிகர்களுக்கு மிக்க மகிழ்ச்சியை அளித்தது. ஆனால் இந்த ஆட்டத்தில் மேன் ஆப் த மேட்ச் டோனிக்கு வழங்கப்பட்டது ஆச்சரியத்தை அளித்தது. இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிவர்களில் வித்யுத் சிவராமகிருஷ்ணன், பிளமிங், மோர்க்கல், டெல்லி அணியில் கம்பீர், தவான் என பலர் உள்ளனர். ஆனால் துவக்க ஆட்டக்காரர்களின் அசத்தலான துவக்கதை பயன்படுத்தாமல் சொதப்பலாக விளையாடி ஆட்டத்தை கடைசி வரை இழுத்தடித்த டோனிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது.

2 comments:

said...

இழுத்தடிக்கிறதுன்னு சொன்னாலும் ஒரு பக்கத்தில் விக்கெட் விழுந்துக்கிட்டு இருக்கும் பொழுது ஆத்திரப்படாமல் கிட்டத்தட்ட கடைசி வரைக்கும் அவர் இருந்ததால்தானே மேட்ச் கடைசி வரை வந்தது. அதனால்தானோ என்னமோ.

அது மட்டுமில்லாம எல்லாருமே ஓரளவுக்கு ஆடி இருக்கும் போது அணிக்குன்னு தர முடியாது என்பதால் அணித் தலைவர் என்ற முறையில் தந்துட்டாங்களோ என்னவோ.

Freeயா விடு மாமே!

said...

வாங்க கொத்ஸ். இருந்தாலும் மனசு கேக்கலை அதான். வருகைக்கு நன்றி.