Tuesday, April 29, 2008

28-04-08 - IPL தமிழ் கிரிக்கெட் -நெல்லை தொடர்ந்து முன்னிலை

28-04-2008 அன்று நடைபெற்ற IPL கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியும், பெங்களுரூ அணியும் மோதின. முதலில் பேட் செய்த அணி சென்னை 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. சென்னை அணியின் தோனி 65 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து ஆடிய பெங்களுரூ அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது.. எனவே சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபாரமாக பேட் செய்த சிறந்த தோனிஆட்டக்காரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.




அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் 15 ஆட்டங்களின் முடிவில் நெல்லை அணி தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றது. அதை தொடர்ந்து கும்மி அணி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.

முழு ஸ்கோர் போர்டு


Saturday, April 26, 2008

ஹர்பஜன் சிங் பளார்., பளார்., கண்ணீர் விட்டு அழுத ஸ்ரீசாந்த்

மொகாலி : கிங்ஸ் ஆப் லெவன் பஞ்சாப் அணிக்கும், மும்பை இந்தியன்சுக்கும் இடையே நடைபெற்ற போட்டியின் இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்பஜன் சிங், எதிரணி வீரரான ஸ்ரீசாந்த்தை கன்னத்தில் அறைந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



மொகாலியில் கிங்ஸ் ஆப் லெவன் பஞ்சாப் அணிக்கும், மும்பை இந்தியன்சுக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் யுவராஜ் சிங் தலைமையிலான கிங்ஸ் ஆப் லெவன் பஞ்சாப் அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றி யை கொண்டாடும் இனிய தருணத்தில் உற்சாகத் துள்ளல் போட்ட ஸ்ரீசாந்த்தின் கன்னத்தில் அறைந்தார் ஹர்பஜன் சிங் இதனை சற்றும் எதிர்பாராத ஸ்ரீசாந்த் , அந்த இடத்திலேயே அதிர்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதார். இதன்பின் இந்த செயலுக்கு ஸ்ரீசாந்திடம் ஹர்பஜன் சிங் மனிப்பு கேட்டுக்கொண்டார். இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




Now harbhajan singh proof hayden comments. Yes he was a MAD BOY.
by arivazhagan,Singapore



பொதுஇடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதும் வெற்றியோ தோல்வியோ ஒரு நல்ல விளையாட்டாளன் தனது உணர்வுகளை வெளியே காட்டாமல் சாதாரணமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவுக்கூட இல்லாத இவர்களை கிரிக்கெட் விளையாட்டிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். இவர்கள் விளையாட்டளர்கள் அல்ல. வியாபாரிகள்!
by அக்னிபுத்திரன்,India

செய்தி : தினமலர்

Friday, April 25, 2008

24-04-08 - IPL தமிழ் கிரிக்கெட் - சைமெண்ட்ஸ், அப்ரிதி அபாரம் -நெல்லை முன்னிலை

24-04-2008 அன்று நடைபெற்ற IPL கிரிக்கெட் போட்டியில் ஹைதராபாத் அணியும், ஜெய்ப்பூர் அணியும் மோதின. முதலில் பேட் செய்த அணி ஹைதராபாத் 5 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் அணியின் சைமெண்ட்ஸ் 117* ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து ஆடிய ஜெய்ப்பூர் அணி 19.5 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.. எனவே ஜெய்ப்பூர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபாரமாக பந்து வீசி பேட் செய்த யூசுப் பதான் சிறந்த ஆட்டக்காரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.




அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் ஏழு நாட்களின் ஆட்டங்களின் முடிவில் நெல்லை அணி தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றது. அதை தொடர்ந்து மதுரை அணி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் சைமண்ட்ச் மற்றும் அப்ரிதியின் ஆபார ஆட்டம் இவ்விரு அணிகளுக்கும் நன்கு கை கொடுத்தது.

தமிழ் கிரிக்கெட் முழு ஸ்கோர் கார்ட்

Thursday, April 24, 2008

23-04-08 - IPL தமிழ் கிரிக்கெட் - நெல்லை முன்னிலை

23-04-2008 அன்று நடைபெற்ற IPL கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியும், மும்பையும் மோதின. முதலில் பேட் செய்த சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. சென்னை அணியின் மாத்யூ ஹைடன் 81 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து ஆடிய மும்பை அணி 20 ஓவரில் 202 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே சென்னை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது சென்னைக்கு தொடர்ந்த இரண்டாவது வெற்றியாகவும், மும்பைக்கு இரண்டாவது தோல்வியாகவும் அமைந்துள்ளது.












அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் ஆறு நாட்களின் ஆட்டங்களின் முடிவில் நெல்லை அணி தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றது. அதை தொடர்ந்து மதுரை அணி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.



22-04-08 வரையிலான ஸ்கோர் போர்டு

Tuesday, April 22, 2008

22-04-2008 IPL தமிழ் கிரிக்கெட் நெல்லை முன்னிலை

22-04-2008 அன்று நடைபெற்ற IPL கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் மோதின. முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் அணியின் ரோகித் சர்மா 66 ரன்கள் எடுத்தார். அந்த அணியின் சைமன்ட்ஸ், அப்ரிதி, கில்கிறிஸ்ட் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதைத் தொடர்ந்து ஆடிய டெல்லிஅணி 13.0 ஓவரில் 143 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் சேவாக் ஆட்டமிழக்காமல் 94 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழி வகுத்தார்.



ஹைதராபாத் அணி தொடர்ந்து தனது இரண்டு ஆட்டங்களிலும் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

ஏழு ஆட்டங்களின் முடிவில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் நெல்லை அணி தொடர்ந்து முன்னிலை வைக்கிறது.

மேல் விபரங்களுக்கு முழு ஸ்கோர் போர்டு கீழே


21-04-08 - IPL தமிழ் கிரிக்கெட் - நெல்லை மீண்டும் முன்னிலை

21-04-2008 அன்று நடைபெற்ற IPL கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணியும், மொகாலியும் மோதின. முதலில் பேட் செய்த மொகாலி அணி 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. மொகாலி அணியின் கேப்டன் வார்னே அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார். மொகாலி அணியின் யுவராஜ் சிங் 57 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 18.1 ஓவரில் 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் வாட்சன் ஆட்டமிழக்காமல் 76 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழி வகுத்தார்.


ராஜஸ்தான் அணி தொடர்ந்து தனது இரண்டு ஆட்டங்களிலும் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.


அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் நான்காவது நாட்களின் ஆட்டங்களின் முடிவில் நேற்று முன்னிலையில் இருந்த மதுரை அணியை பின்னுக்கு தள்ளி நெல்லை அணி முதல் இடத்தை மீண்டும் பிடித்து விட்டது.

Monday, April 21, 2008

20-04-08 IPL தமிழ் கிரிக்கெட் மதுரை முன்னிலை

20-04-2008 நடைபெற்ற IPL கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா அணியும் மோதின. இதில் ஹைதராபாத் அணி பரிதாபமாக தோல்வி அடைந்தது. இரண்டாவது ஆட்டத்தில் பெங்களுரு அணியும், மும்பாய் அணியும் மோதின. இதில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் போலாக், கல்லிஸ், பெளச்சரின் ஆட்டங்கள் அருமையாக இருந்தன.





அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் மூன்றாவது நாட்களின் ஆட்டங்களின் முடிவில் மதுரை அணி இது வரை முதல் இடத்தில் இருந்த நெல்லையை 4 பாய்ண்ட் வித்தியாசத்தில் பின்னுக்கு தள்ளி முதல் இடத்தைப் பிடித்து விட்டது.
20-04-08 இரவு ஸ்கோர் நிலவரம்.

Sunday, April 20, 2008

19-04-2008 IPL தமிழ் கிரிக்கெட் நெல்லை முன்னிலை

19-04-2008 அன்று IPL ல் இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் சென்னை அணியும், மொகாலி அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் தலைவர் டோனி முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஹச்சி 54 பந்துகளில் 116 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதைத் தொடர்ந்து ஆடிய மொகாலி அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 207 ரன் மட்டுமே எடுத்தது. எனவே சென்னை 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



இரண்டாவது ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணியும், டெல்லி அணியும் மோதியது. இதில் 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற்றது.





மூன்று ஆட்டங்களின் முடிவில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் நெல்லை அணி தொடர்ந்து முன்னிலை வைக்கிறது.




மேல் விபரங்களுக்கு முழு ஸ்கோர் போர்டு

Saturday, April 19, 2008

18-04-08 ஐபிஎல் - தமிழ் கிரிக்கெட் - நெல்லை அணி முன்னிலை

18-04-08 அன்று நடைபெற்ற IPL கிரிக்கெட்டின் ஆட்டத்தில் பெங்களூரு அணியை கொல்கத்தா அணி அபாரமாக வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியின் மெக்கல்லம் சிறப்பாக ஆடி 158 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அதன் அடிப்படையில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் நெல்லை அணி முன்னிலை பெற்றுள்ளது.

அணி மற்றும் ஸ்கோர் விபரம்

1 கும்மி XI இம்சை 66
2 மதுரை பாண்டியர்கள் 119
3 சென்னை பாய்ஸ் 29
4 கோவை கொங்கு சிங்கங்கள் 163
5 சேலம் சிறுத்தைகள் 96
6 நெல்லைச்சீமையினர் 215
7 திருச்சி - மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் 84


Monday, April 7, 2008

2011 உலக கோப்பையில் விளையாட விரும்புகிறேன் : சச்சின்

ஏறக்குறைய 20 ஆண்டுகாலமாக கிரிக்கெட்டில் கோலோச்சிய நிலையிலுள்ள இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், 2011-ல் நடைபெறவுள்ள உலக கோப்பையில் விளையாடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதன்மூலம், உலக கோப்பையை வெல்லும் இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்ற தனது நீண்டநாள் கனவு நிறைவேறுவதற்கான வாய்ப்பு கிட்டும் என்று தாம் நம்புவதாக, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1986-ல் தனது 16-வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த சச்சினிடம், தனது காலக்கட்டத்தில் இந்திய அணி உலக கோப்பையை வெல்லவில்லையே என்ற ஏக்கம் இருக்கிறது.

தனது உலக கோப்பை கனவு நிறைவேறும் என்ற நம்பிக்கைக் கொண்டிருக்கும் அவர், 2011-ல் நடைபெறவுள்ள உலக கோப்பையில் விளையாடுவதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்றும், இடைவெளி நீண்டதூரமாக இருப்பினும் அதைக் கருத்தில்கொள்ள விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது தனது ஆட்டத்தை ரசித்துணர்ந்து விளையாடுவதாக குறிப்பிடும் டெண்டுல்கர், அடுத்த உலக கோப்பையில் விளையாடினால், மொத்தம் ஆறு உலக கோப்பைகளில் தொடர்ந்து விளையாடிய பெருமையைப் பெறுவார்.


சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகு, சமூக சேவை மற்றும் கிரிக்கெட் சார்ந்த பணிகளை தொடரவுள்ளதாக சச்சின் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
(மூலம் - வெப்துனியா)


நீங்களும் பங்கு கொள்ளுங்கள் எய்ட்ஸ் நலநிதி கிரிக்கெட் போட்டி

Wednesday, April 2, 2008

ICL கிரிக்கெட் புதிய போட்டிகள் அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட ICL என்னும் கிரிக்கெட் தொடர் விளையாட்டு மூலம் இருபதுக்கு 20 ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இவை தற்பொழுது முடிவடையும் கட்டத்தை எட்டி உள்ளன. இதில் அரை இறுதியில் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணியும், ஐதராபாத் ஹீரோஸ் அணியும் மோத உள்ளன. இரண்டாவது அரையிறுதியில் லாகூர் பாட்ஷாஸ்-கோல்கட்டா டைகர்ஸ் அணிகள் மோத உள்ளன. இதைத் தொடர்ந்த அடுத்த கட்ட போட்டிகளை ICL அறிவித்துள்ளது. அதன்படி அணிகள் இந்தியா, பாகிஸ்தான், உலக லெவன் என மூன்று அணிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் அணிக்கு இன்ஜமாம் உல் ஹக்கும், உலக லெவன் அணிக்கு கிரிஸ் கெய்ர்ன்ஸும் தலைமை ஏற்கின்றனர். இதை கபில்தேவ் அறிவித்தார்.
ஆட்ட விபரம்
ICL India v ICL World - Apr 9, 2008


ICL Pakistan v ICL World - Apr 10, 2008

ICL India v ICL Pakistan - Apr 11, 2008

ICL India v ICL World - Apr 12, 2008

ICL India v ICL Pakistan - Apr 13, 2008

ICL Pakistan v ICL World - Apr 14, 2008

Final: - Apr 15, 2008

நீங்களும் பங்கு கொள்ளுங்கள் எய்ட்ஸ் நலநிதி கிரிக்கெட் போட்டி

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தருக்கு: 5 ஆண்டு விளையாட தடை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தருக்கு 5 ஆண்டுகள் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தடை விதித்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டு சக நாட்டு வீரரான முகமது ஆசிப்பை பேட்டால் அடித்தது, வன்முறை மற்றும் உடல் தகுதியன்மை போன்ற பல காரணங்களினால் கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாடாமல் இருந்தார்.


இ‌தனிடை‌‌யே இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாட அக்தர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்தர் மீதுள்ள குற்றங்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு விசாரனை நடத்தி வந்தது. இதனிடை‌யே அவருக்கு ஐந்து ஆண்டுகள் விளையாட தடை விதிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தலைவர் நாசிம் அஸ்ரப் ‌தெரிவித்துள்ளார். இதன்படி அவர் ஐந்து ஆண்டுகளுக்கு பாகிஸ்தான் அணியில் விளையாட ‌தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாட அனுமதி அளித்துள்ளது.

நீங்களும் பங்கு கொள்ளுங்கள் எய்ட்ஸ் நலநிதி கிரிக்கெட் போட்டி

ICC மீண்டும் சிக்கல்- தலைவர் பதவியில் இருந்து படேல் விலகல்

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பிரதான அலுவலராக பதவியேற்க விருப்பமில்லை என்று இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் செயலாளர் ஐ.எஸ் பிந்த்ரா தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பிரதான அலுவலராக மால்கம் ஸ்பீடு இருந்து வருகிறார். இவருடைய ஏழு ஆண்டு பதவி காலம் வரும் ஜூலை மாதம் முடிவடைகிறது. இதனால் சமீபத்தில் நடந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் உயர்மட்ட குழு கூட்டத்தில், தென் ஆப்ரிக்காவை சேர்ந்த இம்தியாஸ் படேல் , ஐ.எஸ் பிந்த்ரா இருவரின் பெயர் ஐ.சி.சி பிரதான அலுவலர் பதவிக்காக பரிசீலிக்கப்பட்டது. இறுதியில் தென் ஆப்ரிக்கவை சேர்ந்த இம்தியாஸ் படேல் இந்த பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐ.எஸ் பிந்த்ராவுக்கு ஐ.சி.சி அமைப்பின் முதன்மை ஆலோசகராக பதவி அளிக்கப்பட்டது. ஆனால் இம்தியாஸ் படேல் ஐ.சி.சி பிரதான அலுவலர் பதவியில் விருப்பம் இல்லை என்று ஐ.சி.சி அமைப்பிடம் தெரிவித்துவிட்டார். அடுத்து ஐ.எஸ் பிந்த்ராவுக்கு இந்த பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் பிந்த்ரா ஐ.சி.சி முதன்மை அலுவலர் பதவியில் தொடர விரும்புவதாகவும், சொந்த வேலை காரணமாக புதிய பதவி பொறுப்பேற்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் ஐ.சி.சி உயர்மட்ட குழு புதிய பிரதான அலுவலரை தேர்ந்தெடுக்க மறுபடியும் கூட உள்ளது

நீங்களும் பங்கு கொள்ளுங்கள் எய்ட்ஸ் நலநிதி கிரிக்கெட் போட்டி