Friday, May 2, 2008

தாதாவுக்கு ஹாட்ரிக் தோல்வி - IPL தமிழ் கிரிக்கெட் - நெல்லை முன்னிலை

01-05-2008 அன்று IPL கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் சுமாரான அணியாக கருதப்பட்ட ஜெய்ப்பூர் அணியும், வலுவான அணியாக கணக்கிடப்பட்ட கொல்கத்தா அணியும் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஜெய்ப்பூர் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது. அஸ்னாத்கர் 60 ரன்களும் யூசுப் பதான் 55 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா அணியின் உமர் குல் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து பேட் செய்த கொல்கத்தா 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்த்து. அந்த அணியின் தலைவர் கங்குலி 51 ரன்கள் எடுத்தார். இந்த தோல்வி கொல்கத்தாவுக்கு தொடர்ந்து மூன்றாவது தோல்வி ஆகும். ஜெய்ப்பூருக்கு இது தொடர்ந்த நான்காவது வெற்றி ஆகும்.

ஜெய்ப்பூரின் அஸ்னாத்கர்
இரவு நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஹைதராபாத் அணியும், மொகாலி அணியும் மோதின, இதில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் 20 ஓவரில் 8 விக்கெட்களை இழந்து 164 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ரோகித் சர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 76 ரன்கள் எடுத்தார். மொகாலி அணியின் ப்யூஸ் சாவ்லா 3 விக்கெட்களையும், பதான் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து ஆடிய மொகாலி அணி 18.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மொகாலி அணியின் மார்ஷ் 86 ரன்களும், ஜெயவர்தனே 45 ரன்களும் எடுத்தனர்.

அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் 19 ஆட்டங்களின் முடிவில் நெல்லை அணி தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றது. அதை தொடர்ந்து மதுரை அணி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.

19 ஆட்டங்களின் முடிவில் தமிழ் கிரிக்கெட் ஸ்கோர் போர்டு

0 comments: