Monday, March 31, 2008

எய்ட்ஸ் நலநிதிக் கிரிக்கெட் போட்டி - அறிவிப்பு

இது ஒரு வித்தியாசமான கிரிக்கெட் போட்டி. உங்களது வேலை 11 பேர் கொண்ட ஒரு கிரிக்கெட் அணியை அறிவிக்க வேண்டியது மட்டுமே. அதன் பின் ஹாயாக அமர்ந்து ஆட்டத்தை ரசிக்க வேண்டியது தான். ஒரு பைசாவும் செலவு இல்லாமல் ஒரு அணியை வாங்கி ஆடவிடக் கூடிய ஆட்டம். ஏப்ரல் 18 முதல் சூன் 1 வரை நடைபெறும் IPL முடிவுகளைப் பொறுத்து இந்த போட்டியின் முடிவு அமையும். உங்களது அணியை எதிர்த்து ஆட இருப்பது நமது சக பதிவரின் அணியே!

அணியைத் தேர்ந்தெடுக்கும் முறை

1. ஒவ்வொரு பங்கேற்பாளரும் தனது சார்பாக IPL கிரிக்கெட்டில் ஆடும் வீரர்களில் 11 பேர் கொண்ட அணியை தெரிவிக்க வேண்டும்.
2. 8 அணியில் இருந்தும் நாங்கள் தரும் பட்டியலில் இருந்து 4 மட்டையாளர்களையும், 4 பந்துவீச்சாளர்களையும், 2 ஆல்-ரவுண்டர்களையும் 1 விக்கெட் காப்பாளரையும் தேர்ந்தெடுக்க வேண்டும். (பட்டியல இங்கே)
3. 5 மட்டையாளர் 3 பந்து வீச்சாளர் போன்றவை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
4. தத்தமது அணிக்கு ஒரு தமிழ் பெயரையும் சூட்டலாம். அது உங்களது பெயராகக் கூட இருக்கலாம்.
5. 11 பேரில் இருந்து ஒருவரை அணித்தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும்
6. ஒரே நாட்டைச் சேர்ந்த வீரர்களையோ, அல்லது கலந்தோ தேர்ந்தெடுக்கலாம்.

வெற்றி பெறும் முறை
1.ஏப்ரல் 18 முதல் சூன் 1 வரை நடைபெறும் IPL ஆட்டங்களில் வீரர்கள் எடுக்கும் ஸ்கோரை வைத்து மதிப்பெண்கள் இடப்படும்.
2. ஒரு ரன்னுக்கு ஒரு மதிப்பெண்ணும், ஒரு விக்கெட்டிற்கு 20 மதிப்பெணும், ஒரு கேட்சிற்கு 5 மதிப்பெண்ணும் வழங்கப்படும்.
3. விக்கெட் காப்பாளருக்கு ஸ்டெம்பிங்குக்கு 5 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
4. ரன் அவுட்டுக்கு மதிப்பெண் கிடையாது
5. அணித்தலைவரின் மதிப்பெணுக்கு இரட்டிப்பு மதிப்பெண் வழங்கப்படும்.
( எ.கா : ஒரு ஆட்டத்தில் ஒரு வீரர் 25 ரன் எடுத்து, இரண்டு விக்கெட்டை வீழ்த்தி, இரண்டு கேட்ச்சும் பிடித்திருந்தால் ( 25+(2*20)+(2*5)=) 75 மதிப்பெண் கிடைக்கும். இதே அணித்தலைவருக்கு 150 மதிப்பெண்ணாகி விடும்.)
7. மழை இன்ன பிற காரணங்களால் ஆட்டம் தடை பெற்றால் அதுவரை ஆடப்பெற்ற ஆட்டத்தின் மதிப்பில் மதிப்பெண்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

கவனிக்க வேண்டியவை
1. நீங்கள் தமிழில் ப்ளாக் எழுதக் கூடியவர்களாக இருக்க வேண்டும்
2. உங்கள் அணி வெற்றி பெற்றால் பரிசுத் தொகையை எய்ட்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உங்கள் பெயரில் வழங்கப்பட்டு ரசீது உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விபரம் இங்கே
3. பரிசுத் தொகை முழுவதும் பதிவரின் சொந்த பணமே
4. உங்களது அணியை அறிவிக்கக் கடைசி நாள் ஏப்ரல் 15 2008
5. உங்களுடைய 11 வீரர்கள் கொண்ட அணியை உங்கள் பதிவில் இட்டு இங்கு பின்னூட்டமாகத் தெரிவிக்க வேண்டும், அல்லது இங்கு பின்னூட்டத்தில் கூட தெரிவிக்கலாம்,
6. ஏப்ரல் 15 வரை அதை மாற்றி அமைத்துக் கொள்ள உங்களுக்கு அவகாசம் உள்ளது.
7. ஏப்ரல் 16 அன்று ஒவ்வொரு அணியின் விபரமும் இங்கு வெளியிடப்படும். அதில் தவறு இருந்தால் ஏப்ரல் 17 க்குள் தெரிவிக்க வேண்டும்.
8. ஏப்ரல் 19 முதல் IPL போட்டியில் வீரர்களின் ஆட்ட முடிவுகளைப் பொறுத்து உங்களது அணிக்கு மதிப்பெண்கள் அளிக்கப் பட்டு இங்கு வெளியிடப்படும்.
7. உங்களது அணியின் ஒரு ஆட்டக்காரர் எந்த காரணத்தினாலோ விளையாடவில்லையென்றால் அதற்குப் பதிலாக வேறொருவரை சேர்க்க இயலாது. எனவே ஏப்ரல் 15 க்கு முன் கவனமாக உங்களது ஆட்டக்காரரைத் தேர்ந்தெடுங்கள்.

ஒரு மாதிரி ஸ்கோர் போர்டு இங்கே


இதே போல் ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு இங்கு வெளியாகும். அதிக மதிப்பெண் பெற்ற அணி வெற்றி பெறும். பங்குகொள்ள உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இதைப் படிப்பவர்கள் தங்களது பங்களிப்பைத் தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். Best of Luck
போட்டியில் உள்ள அணி
1. இம்சையின் கும்மி XI

Tuesday, March 25, 2008

IPL வீரர்கள் பட்டியல்

Bangalore Royal Challengers

Rahul Dravid (c) Abdur Razzak Balachandra Akhil

KP Appanna Jagadeesh Arunkumar Mark Boucher (wk)

Nathan Bracken Shivnarine Chanderpaul Bharat Chipli

Shreevats Goswami (wk) Wasim Jaffer Sunil Joshi

Jacques Kallis Zaheer Khan Virat Kohli

Praveen Kumar Anil Kumble Misbah-ul-Haq

Devraj Patil Dale Steyn Ross Taylor

Vinay Kumar Cameron White

Chennai Super Kings

MS Dhoni (c) Sudeep Tyagi Srikkanth Anirudha

R Ashwin Subramaniam Badrinath Lakshmipathy Balaji

Napoleon Einstein Stephen Fleming Matthew Hayden

Michael Hussey Shadab Jakati Joginder Sharma

Albie Morkel Abhinav Mukund Muttiah Muralitharan

Makhaya Ntini Jacob Oram Parthiv Patel (wk) Suresh Raina

Deccan Chargers Hydrabad

VVS Laxman (c) Halhadar Das (wk) Herschelle Gibbs

Adam Gilchrist (wk) Doddapaneni Kalyankrishna

Pragyan Ojha Dwaraka Ravi Teja Shahid Afridi

Rohit Sharma Chamara Silva Rudra Pratap Singh

Scott Styris Andrew Symonds Chaminda Vaas Venugopal Rao

Paidikalva Vijaykumar Arjun Yadav Nuwan Zoysa

Delhi Daredevils

Virender Sehwag (c) Rajat Bhatia AB de Villiers

Shikhar Dhawan Tillakaratne Dilshan Gautam Gambhir

Brett Geeves Dinesh Karthik Glenn McGrath

Farveez Maharoof Yo Mahesh Mithun Manhas Amit Mishra

Mohammad Asif Pradeep Sangwan Shoaib Malik

Mayank Tehlan Manoj Tiwary Daniel Vettori

Punjab Kings Mohali

Yuvraj Singh (c) Ajitesh Argal Karan Goel

James Hopes Mahela Jayawardene Simon Katich

Uday Kaul Brett Lee Kyle Mills Irfan Pathan

Piyush Chawla Luke Pomersbach Ramesh Powar

Kumar Sangakkara (wk) Ramnaresh Sarwan

Vikram Singh Sreesanth Tanmay Srivastava

Rajasthan Royals Jaipur

Shane Warne (c) Ravindra Jadeja Mohammad Kaif

Kamran Akmal Taruwar Kohli Justin Langer

Dimitri Mascarenhas Morne Morkel Pankaj Singh

Munaf Patel Yusuf Pathan Anup Revandkar

Graeme Smith Sohail Tanvir Shane Watson Younis Khan

Kolkata Knight Riders

Sourav Ganguly (c) Siddarth Kaul Ajit Agarkar

Aakash Chopra Chris Gayle David Hussey

Iqbal Abdulla Murali Kartik Brendon McCullum (wk)

Mohammad Hafeez Ricky Ponting Cheteshwar Pujara

Salman Butt Ishant Sharma Shoaib Akhtar

Tatenda Taibu (wk) Umar Gul

Mumbai Indians

Sachin Tendulkar (c) Loots Bosman Dilhara Fernando

Harbhajan Singh Sanath Jayasuriya Lasith Malinga

Abhishek Nayar Ashish Nehra Manish Pandey

Shaun Pollock Ashwell Prince Ajinkya Rahane

Pinal Shah (wk) Yogesh Vijay Takawale (wk)

Saurabh Tiwary Robin Uthappa