ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ் மற்றும் சங்ககாராவின் அபார ஆட்டத்தால் மொகாலி அணி தனது ஒன்பதாவது வெற்றியை பதிவு செய்தது. ஐ.பி.எல். டுவென்டி 20 கிரிக்கெட் தொடரில் மொகாலியில் நடைபெற்ற போட்டியில் யுவராஜ்சிங் தலைமையிலான மொகாலி அணியும், கில்கிறிஸ்ட் தலைமையிலான
ஹைதராபாத் அணியும் மோதியதில் மொகாலி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மொகாலி அணி டாஸ் வென்று பீல்டிங் செய்ததை தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் கில்கிரிஸ்ட் மற்றும் ரோகித் சர்மா இருவரும் தலா 50 ரன்கள் எடுத்தனர். 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய மொகாலி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மார்ஷ் 60 ரன்களும், சங்ககாரா 25 பந்துகளில் 50 ரன்களும் எடுத்தனர்.
அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் 48 ஆட்டங்களின் முடிவில் நெல்லை அணி தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றது. சென்னை அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. திருச்சி மூன்றாம் இடத்தையும், இம்சையின் கும்மி XI நான்காம் இடத்தையும் பெற்றுள்ளன.
திரைப் படப் பாடல்கள் 3Gp யில்
Saturday, May 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment