Friday, May 23, 2008

இலவச கொத்தனாருக்கு படம் காட்டப் போறோம்

சமீபத்தில் கிரிக்கெட் ரசிகனின் ஒரு பதிவில் மும்பை அணியின் ஒருதலைபட்சமான ஆட்ட ரசிப்பை பற்றி யுவராஜ் சிங்கின் விரக்தியான பேச்சு பற்றி பதிவு வந்தது. கிரிக்கெட்டில் எந்த அணி ஆடினாலும் சிறப்பாக செயல்படும் போது அதை பாராட்டுவதும், ரசித்து ஆரவாரம் செய்வதும் உண்மையான ரசிகர்களுக்கான பண்பாடு. அருகில் உள்ள மாநிலத்தின் அணி, அதில் விளையாடுபவர்களில் பெரும்பாலானவர்கள் இந்திய அணியைச் சார்ந்தவர்கள் என்னும் நிலையில், கிரிக்கெட் ஆட்டத்தை ரசிக்காமல், தங்களது அணிக்கு மட்டுமே ஒருதலை சார்பாக ஆதரவளித்தது வருத்தப்பட வேண்டியது தான்.

இந்த விடயத்தில் வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது என்பதற்கே இந்த படக்காட்சி. இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் எதிரான ஆட்டம் என்பது ஒரு போர்க்களம் போல தான் இருக்கும். ஆனால் சென்னையில் மட்டும் அது வேறுபடும். சையத் அன்வர் உலக சாதனை நிகழ்த்திய (194 ரன்கள்) அந்த சாதனையை சென்னை மக்கள் எப்படி பாராட்டினார்கள் என்பதையும், அதை ஏற்றுக் கொண்டு மகிழ்ந்த அன்வரையும் இந்த படக்காட்சியில் காணுங்கள். (இரண்டு நிமிடத்திற்கும் குறைவானதே)



டிஸ்கி : தலைப்பு சும்மா லுலுலுவா. சென்ஷி மட்டும் தான் கொத்ஸை வைத்து தலைப்பு வைப்பாரா? நாங்கள் வைக்க மாட்டமா? :))))))))

3 comments:

said...

அந்தக் கைதட்டின கும்பல்லே நானும் ஒருவன்.. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்? (சிவப்புச்சட்டை)

எங்களுக்குதான் தெரியும் எவ்வளவு கடுப்பை மறைச்சுகிட்டு கைதட்டினோம் என்று :-))

said...

இதெல்லாம் சரிதான். ஆனா நான் ஒரு டீமுக்கு சப்போர்ட் பண்ணும் போது அவங்களுக்குத்தான் குரல் கொடுப்பேன். அடுத்தவன் நல்லா ஆடினா கைத்தட்டுவேன். ஆனா எல்லாரும் அந்த மாதிரி இருக்கணுமுன்னு எதிர்பார்க்கறது தப்பு.

அது மட்டுமில்லாம இந்தியாவுக்கு ஆடுறோம் அதனால கைதட்டுன்னு சொல்லறது எல்லாம் சரியா? அன்னிக்கு அவங்க டீமுக்கு ஆடினது ஜெயசூர்யா. எதிரணிக்கு ஆடினது யுவராஜ். அம்புட்டுதான் இதில் இந்தியா எங்க இருந்து வந்தது?

கால்பந்தாட்டத்தில் இருக்கும் வெறி எல்லாம் இன்னும் இங்க வரலை. அங்க இங்கிலாந்துக்கு ஆடற ஒருத்தர் லண்டனில் இருக்கும் அணிக்கு எதிராக ஆடினால் கூட அவருக்கு கைத்தட்டு எல்லாம் கிடைக்காது.

இதுக்கெல்லாம் வருத்தப்படறதை விட்டுட்டு விளையாடற வழியைப் பார்க்கணும். அம்புட்டுதான்.

said...

//டிஸ்கி : தலைப்பு சும்மா லுலுலுவா. சென்ஷி மட்டும் தான் கொத்ஸை வைத்து தலைப்பு வைப்பாரா? நாங்கள் வைக்க மாட்டமா? :))))))))//

ஆமாம்.. நேத்து கொத்ஸூ, நாளைக்கு நான் ஊறுகாய வச்சு பதிவு போடபோறேன்... :))