Wednesday, May 21, 2008

மும்பை கிரிக்கெட் ரசிகர்கள் - யுவராஜ் சிங் விரக்தி

IPL கிரிக்கெட் உச்சகட்டத்தை எட்டி விட்டது. பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறவில்லை. இந்நிலையில் இன்று நடைபெற்ற மும்பை - மொகாலிக்கு இடையேயான ஆட்டம் மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. இறுதி ஓவரில் ஒரு ரன் வித்தியாசத்தில் மொகாலி அணி வெற்றி பெற்றது.



இதைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய மொகாலி அணியின் தலைவர் யுவராஜ் சிங் மும்பை ரசிகரை சாடிப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. யுவராஞ் சிங் பேசும் போது ” மும்பை ரசிகர்கள் இன்று மிகவும் ஒருதலைப்பட்சமாக மும்பை அணிக்கு ஆதரவாக நடந்து கொண்டனர். இதை அவர்களுக்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன. இந்திய அணியில் விளையாடக் கூடிய வீரர்களும் மொகாலி அணியில் இருக்கிறோம் என்ப்தை மறந்து விடக்கூடாது” என்று கூறினார்.

5 comments:

said...

என்ன முட்டாள்த்தனம். மும்பை அணிக்கு மும்பையில்தான் சப்போர்ட் இருக்கும்.

இவர்களுக்கு இவர்கள் ஊரில் சப்போர்ட் இருக்கும். இவர்களை சப்போர்ட் செய்ய இவர்கள் என்ன இந்திய அணிக்கா ஆடுகிறார்கள்.

இதே போன்ற நிகழ்வுக்குப் பின் தோணி இன்று இவர்கள் எனக்காக ஆர்ப்பரிக்கவில்லை என்றாலும் நான் இந்தியாவிற்காக விளையாடும் பொழுது இவர்கள் என் பின்னே நிற்பார்கள் என்று சொன்ன முதிர்ச்சி யுவராஜிடம் இல்லை. அவ்வளவுதான்.

said...

இன்று நடைபெற்ற மும்பை - ஜெய்ப்பூருக்கு இடையேயான ஆட்டம் மிகவும் பரபரப்பாக நடைபெற்றது.
மும்பை - பஞ்சாப் என்று இருக்க வேண்டும்

said...

///இலவசக்கொத்தனார் said...

என்ன முட்டாள்த்தனம். மும்பை அணிக்கு மும்பையில்தான் சப்போர்ட் இருக்கும்.

இவர்களுக்கு இவர்கள் ஊரில் சப்போர்ட் இருக்கும். இவர்களை சப்போர்ட் செய்ய இவர்கள் என்ன இந்திய அணிக்கா ஆடுகிறார்கள்.

இதே போன்ற நிகழ்வுக்குப் பின் தோணி இன்று இவர்கள் எனக்காக ஆர்ப்பரிக்கவில்லை என்றாலும் நான் இந்தியாவிற்காக விளையாடும் பொழுது இவர்கள் என் பின்னே நிற்பார்கள் என்று சொன்ன முதிர்ச்சி யுவராஜிடம் இல்லை. அவ்வளவுதான். ///
கொத்ஸ் ஐயா! கிரிக்கெட் விளையாட்டில் ஒரு வீரர் சிறப்பாக ஆடும் போது அதை தன்னை மறந்து பாராட்டுவது தான் நல்ல ரசிகனுக்கு இருக்கும் உணர்வு. அது எதிரி அணியாக இருந்தாலும் சரியே!

said...

///nedun said...

இன்று நடைபெற்ற மும்பை - ஜெய்ப்பூருக்கு இடையேயான ஆட்டம் மிகவும் பரபரப்பாக நடைபெற்றது.
மும்பை - பஞ்சாப் என்று இருக்க வேண்டும ///
நெதுன் (?) தவறுக்கு மன்னிக்கவும். மாற்றப்பட்டு விட்டது.

said...

திராவிட் கூட இதை ஆச்சரியத்துடன் குறிப்பிட்டிருக்கிறார்.

அவர் ஒரு நாலு ஓட்டங்கள் பிரமாதமான முறையில் அடித்தப் போது மும்பை ரசிகர்கள் அமைதியாக இருந்திருக்கிறார்கள்.