Monday, May 12, 2008

தோல்வியே தொடர்கதையாய் பெங்களூரு - IPL கிரிக்கெட்

ஐ.பி.எல். டுவென்டி 20 கிரிக்கெட் தொடரில் சண்டிகரில் நடைபெற்ற 34 வது போட்டியில் டிராவிட் தலைமையிலான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியும், யுவராஜ்சிங் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதியதில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்று களமிறங்கிய பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன் எடுத்தது. அந்த அணியின் பெளச்சர் 39 ரன்கள் எடுத்தார். ஸ்ரீசாந்த் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்து பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 15.4 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 144 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் மார்ஷ் 74 ரன்களை எடுத்து ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். பெங்களுரு அணியின் தோல்விகள் தொடர்கின்றன.





அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் 34 ஆட்டங்களின் முடிவில் நெல்லை அணி தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றது. சென்னை அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. திருச்சி மூன்றாம் இடத்தையும், இம்சையின் கும்மி XI நான்காம் இடத்தையும் பெற்றுள்ளன.


1 comments:

said...

பெங்களுரு அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா டிராவிடின் மீது வருத்தத்தில் இருப்பதாகவும், இதனால் டிராவிட் கேப்டன் பொறுப்பை விட்டு விலகத் தயாராக இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.