Saturday, May 3, 2008

சென்னைக்கு முதல் தோல்வி - IPL கிரிக்கெட் நிலவரம்

சென்னை: ஐ.பி.எல்., தொடரில் அசைக்க முடியாத அணியாக இருந்த தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் தோல்வியை சந்தித்தது. நேற்றைய லீக் போட்டியில் டில்லி டேர்டெவில்ஸ் அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக வீழ்ந்தது. அதிரடியாக விளை யாடி வெற்றி பெற்ற கேப்டன் சேவக், தனது டில்லி அணியை முதலிடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். சென்னை அணி தற்போது இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.


இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் "டுவென்டி-20' தொடர் நாட்டின் பல்வேறு நகரங் களில் நடக்கிறது. நேற்று சென்னையில் நடந்த முக்கிய லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சேவக் கின் டில்லி டேர்டெவில்ஸ் அணியை சந்தித்தது. "டாஸ்' வென்ற தோனி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.


வந்தார் நிடினி: சென்னை அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆஸ்திரேலியாவின் ஹைடன், ஹசி மற்றும் நியூசிலாந்தின் ஓரம் ஆகியோர் தங்களது தேசிய அணிக்காக விளை யாட சென்றுவிட்டதால், பிளமிங், வித்யூத் சிவராம கிருஷ்ணன், நிடினி வாய்ப்பு பெற்றனர். பழனிக்கு பதிலாக முரளிதரன் இடம்பிடித்தார்.

மெக்ராத் அசத்தல்: துவக்க வீரர்களாக பார்த்திவ், பிளமிங் களமிறங்கினர். மிகவும் கஞ்சத்தனமாக பந்துவீசிய மெக்ராத் ஆரம்பத்திலேயே மிரட்டினார். முதல் இரண்டு ஓவர்களில் வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். ஹைடனின் இடத்தை பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கப் பட்ட பிளமிங் 13 ரன்களுக்கு மகேஷ் பந்தில் வீழ்ந்தார். பார்த்திவ் 21 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.

வித்யூத் அரைசதம்: இந்நிலையில் களமிறங்கிய கேப்டன் தோனி, வித்யூத் சிவராமகிருஷ்ணனுடன் ஜோடி சேர்ந்தார். சூப்பராக பேட் செய்த இந்த ஜோடி டில்லி பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. சேவக் வீசிய 11வது ஓவரில் இருவரும் தலா ஒரு சிக்சர் அடித்து அணியின் ஸ்கோரை விறுவிறுவென உயர்த்தினர். முன்னாள் வீரர் சிவராமகிருஷ்ணன் மகனான வித்யூத் 31வது பந்தில் அரைசதம் கடந்தார். 54 ரன்கள் எடுத்த இவர் மெக்ராத் பந்தில் அவுட்டானார்.
இதைத் தொடர்ந்து ஆடிய டெல்லி அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணியின் சேவாக், கம்பீர் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்தனர். பின்னர் வந்தவர்கள் நிதானமாக ஆடி வெற்றி இலக்கை அடைந்தனர்.


அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் 20 ஆட்டங்களின் முடிவில் நெல்லை அணி தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றது. அதை தொடர்ந்து மதுரை அணி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.

0 comments: