Monday, May 26, 2008

பரபரப்பான ஆட்டத்தில் இராஜஸ்தான் வெற்றி - சென்னைக்கு வாய்ப்பு IPL கிரிக்கெட்

26-05-2008 ல் நடைபெற்ற மும்பை மற்றும் இராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான IPL கிரிக்கெட் ஆட்டத்தில் கடைசி பந்தில் வெற்றிக்குத் தேவையான ரன்னை அடித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பின் முதல் கட்டத்தை மும்பை அணி இழந்துள்ளது. ஆனாலும் தனது கடைசி ஆட்டத்தில் மும்பை அணி பெங்களூருவை வெற்றி பெற்றால் அரை இறுதிக்குள் செல்லும் அணிகளுக்கான போட்டியில் இருக்கும்.

இன்று நடைபெற்ற IPL கிரிக்கெட்டின் 53 வது ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. ஜெயசூர்யா 38 ரன்களும், டெண்டுல்கர் 30 ரன்களும், டகவாலே 8 பந்துகளில் 24 ரன்களும் எடுத்தனர். ராஜஸ்தான் அணியின் சொகைல் தன்வீர் 14 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
146 ரன்களை இலக்காகக் கொண்டு களம் இறங்கிய இராஜஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்தது. பரபரப்பான கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவை என்ற நிலையில் பெர்னாண்டோ வீசிய கடைசி ஓவரில் படேல் மற்றும் ஜடேஜா ஜோடி இணைந்து 15 ரன்களை எடுத்தது. சொகைல் தன்வீர் ஆட்டநாயகனாகவும், அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற பெருமையையும் பெற்றார்.



நாளை நடைபெறும் ஆட்டத்தில் சென்னை அணி ஹைதராபாத் அணியை தோற்கடித்தால் சென்னை அணி அரைறுதிக்கு தகுதி பெறும். இல்லையெனில் மும்பை பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஆட்டத்திற்காக காக்க வேண்டி வரும். அதில் மும்பை வெற்றி பெற்றால் ரன் ரேட் அடிப்படையில் மும்பை அரை இறுதிக்கு தகுதி பெறும்.

0 comments: