Friday, May 30, 2008

டெல்லியை வீழ்த்தி இராஜஸ்தான் இறுதிக்கு தகுதி - IPl கிரிக்கெட்

IPL கிரிக்கெட்டின் இன்றைய அரை இறுதி ஆட்டத்தில் இராஜஸ்தான் அணி டெல்லி அணியை 105 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள IPL கிரிக்கெட் போட்டிகளில் முதல் அரை இறுதி ஆட்டம் இன்று டெல்லி மற்றும் இராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் சேவாக் முதலில் பந்து வீச தீர்மானித்தார். இராஜஸ்தான் அணி தொடக்கம் முதலே பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அஸ்நோத்கர் 39 ரன்களும், வாட்சன் 52 ரன்களும், யூசுப் பதான் 45 ரன்களும் குவித்தனர். டெல்லி அணியில் மகரூப் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து ஆடிய டெல்லி அணி மிக மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. சேவாக், கம்பீர், தவான் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். தில்சான் மட்டும் அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார். அந்த அணி 16.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 87 ரன்கள் மட்டுமே எடுத்தது. இராஜஸ்தான் அணியில் வாட்சன் மற்றும் முனாப் படேல் இருவரும் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இதன் மூலம் அரை இறுதியில் 105 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இராஜஸ்தான் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நாளை நடக்கும் சென்னை - பஞ்சாப் இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் இராஜஸ்தான் அணி வரும் ஜூன் 1 ம் தேதி இறுதி போட்டியில் விளையாடும். இன்றைய ஆட்டத்தின் ஆட்ட நாயகன் விருது 52 ரன்கள் குவித்து 3 விக்கெட்களை வீழ்த்திய ஷேன் வாட்சனுக்கு வழங்கப்பட்டது.

பங்களாதேஷ், முத்தரப்பு கிரிக்கெட் - இந்திய அணி அறிவிப்பு

யூசுப் பதான் மற்றும் ஓஜாவுக்கு வாய்ப்பு.
அடுத்த மாதம் தொடங்க உள்ள பங்களாதேஷுக்கு எதிரான மற்றும் பங்களாதேஷ், மற்றும் பாகிஸ்தான் பங்கு கொள்ளும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடிய இந்திய ஒருநாள் அணியில் இருந்த முனாப் படேல் மற்றும் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதில் யூசுப் பதானும், ஓஜாவும் சேர்க்கப்பட்டுள்ளனர். மூத்த வீரர்கள் டிராவிட், கங்குலிக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. டெண்டுல்கர் காயம் காரணமாக விளையாடவில்லை.
இந்திய அணிவீரர்கள் விபரம் 1. தோனி (கேப்டன்) 2. யுவராஜ் சிங்(து.கே) 3. உத்தப்பா 4. சேவாக் 5. கம்பீர் 6. ரோஹித் சர்மா 7. சுரேஷ் ரெய்னா 8. யூசுப் பதான் 9. இர்பான் பதான் 10. ஸ்ரீசாந்த் 11. இஷாந்த் சர்மா 12. பிரவீன் குமார் 13. ஆர்.பி.சிங் 14. பியூஸ் சாவ்லா 15. ஓஜா

ஐ.பி.எல் கிரிக்கெட் - முதல் அரையிறுதி போட்டி : ராஜஸ்தான்-டில்லி அணிகள் மோதல்


கடந்த ஒன்றரை மாத காலமாக கிரிக்கெட் ரசிகர்களை தொலைக்காட்சி முன் கட்டிப் போட்ட ஐ.பி.எல்., தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. 8 அணிகள் மோதிய இத்தொடரின் அரையிறுதிப்போட்டியில் விளையாட சென்னை, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் டில்லி அணிகள் தகுதி பெற்றுள்ளன. ஜூன் மாதம் 1ம் தேதி நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டியில் விளையாடவிருக்கும் அணிகள் இன்று ( 30-05-08) மற்றும் நாளை (31-05-08) நடைபெறவிருக்கும் அரையிறுதிப் போட்டிகள் மூலம் தகுதி பெறவுள்ளன. முதல் அரையிறுதிப் போட்டி இன்று ராஜஸ்தான் அணிக்கும், டில்லி அணிக்கும் இடையே நடைபெறுகிறது. இரண்டாவது அரையிறுதிப் போட்டி சென்னை அணிக்கும், பஞ்சாப் அணிக்கும் புடையே நடைபெறுகிறது. தொடரின் 2 அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி மும்பை மைதானத்தில் நடைபெறுகிறது. அரையிறுதிப் போட்டிகளில் வெறி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இந்த 2 அரையிறுதிப்போட்டிகளில் ரசிகர்களின் ஆரவாரத்திற்கு பஞ்சமிருக்காது என்பதை நம்பலாம்.

Tuesday, May 27, 2008

சென்னை கலக்கல் - அரை இறுதிக்குத் தகுதி - IPL கிரிக்கெட்

இன்று நடைபெற்ற ஹைதராபாத்துக்கு இடையேயான தனது கடைசி ஆட்டத்தில் வென்றதன் மூலம் சென்னை அணி IPL கிரிக்கெட்டின் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அரை இறுதியில் சென்னை அணி பஞ்சாப் மொகாலி அணியை எதிர் கொள்ள உள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடத்தப்பட்டு வரும் IPL கிரிக்கெட் போட்டிகள் கடைசி கட்டத்தை எட்டி உள்ளன. அரை இறுதிக்கு இராஜஸ்தான் மற்றும் மொகாலி அணிகள் சுலபமாக வெற்றி பெற்ற நிலையில் நேற்றைய மும்பை அணியின் தோல்வி டெல்லியை அரை இறுதிக்குள் எடுத்துச் சென்றது. கடைசியாக நான்காவது அணிக்கு சென்னை மற்றும் மும்பை அணிகள் போட்டியில் இருந்தன. இந்நிலையில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் இடையே இன்று முக்கிய போட்டி நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் வேணு கோபால் ராவ் 46 ரன்களும், தேஜா 40 ரன்களும் எடுத்தனர். சென்னை அணியின் பாலாஜி மற்றும் மோர்க்கல் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.



இதைத் தொடர்ந்து 148 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு ஆடத் துவங்கிய சென்னை அணி 19.2 ஓவரில் 148 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. சென்னை அணியின் ரெய்னா 54 ரன்களும். தோனி 25 பந்துகளில் 37 ரன்களும் எடுத்தனர். இனி லீக் ஆட்டங்களில் உள்ள 2 ஆட்டங்களின் முடிவுகளும் அரை இறுதியில் விளையாடப் போகும் அணிகளில் எந்த மாற்றத்தையும் ஏற்ப்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
டிஸ்கி : 28 பந்துகளில் 40 ரன்கள் அடித்த ஹைதராபாத் அணியின் ரவி தேஜாவின் நல்ல படம் கிடைக்காததால் தேஜாஸ்ரீ யின் படம் போட்டுள்ளோம். ரசிகர்கள் ‘பொறுத்துக்' கொள்ளவும்.

Monday, May 26, 2008

பரபரப்பான ஆட்டத்தில் இராஜஸ்தான் வெற்றி - சென்னைக்கு வாய்ப்பு IPL கிரிக்கெட்

26-05-2008 ல் நடைபெற்ற மும்பை மற்றும் இராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான IPL கிரிக்கெட் ஆட்டத்தில் கடைசி பந்தில் வெற்றிக்குத் தேவையான ரன்னை அடித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பின் முதல் கட்டத்தை மும்பை அணி இழந்துள்ளது. ஆனாலும் தனது கடைசி ஆட்டத்தில் மும்பை அணி பெங்களூருவை வெற்றி பெற்றால் அரை இறுதிக்குள் செல்லும் அணிகளுக்கான போட்டியில் இருக்கும்.

இன்று நடைபெற்ற IPL கிரிக்கெட்டின் 53 வது ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. ஜெயசூர்யா 38 ரன்களும், டெண்டுல்கர் 30 ரன்களும், டகவாலே 8 பந்துகளில் 24 ரன்களும் எடுத்தனர். ராஜஸ்தான் அணியின் சொகைல் தன்வீர் 14 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
146 ரன்களை இலக்காகக் கொண்டு களம் இறங்கிய இராஜஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்தது. பரபரப்பான கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவை என்ற நிலையில் பெர்னாண்டோ வீசிய கடைசி ஓவரில் படேல் மற்றும் ஜடேஜா ஜோடி இணைந்து 15 ரன்களை எடுத்தது. சொகைல் தன்வீர் ஆட்டநாயகனாகவும், அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற பெருமையையும் பெற்றார்.



நாளை நடைபெறும் ஆட்டத்தில் சென்னை அணி ஹைதராபாத் அணியை தோற்கடித்தால் சென்னை அணி அரைறுதிக்கு தகுதி பெறும். இல்லையெனில் மும்பை பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஆட்டத்திற்காக காக்க வேண்டி வரும். அதில் மும்பை வெற்றி பெற்றால் ரன் ரேட் அடிப்படையில் மும்பை அரை இறுதிக்கு தகுதி பெறும்.

சிக்கலில் சென்னை அணி - அரை இறுதிக்கு தகுதி பெறுமா? IPL கிரிக்கெட்

IPL கிரிக்கெட்டின் கடைசி கட்ட ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை அணி தனது கடைசி இரண்டு ஆட்டங்களில் நூலிலையில் தோல்விகளைத் தழுவியதால் அரை இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பு கேள்விக்குறியாகி விட்டது. சென்னை அணி நாளை நடைபெறும் ஹைதராபாத்திற்கு இடையேயான தனது கடைசி ஆட்டத்தில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதே நேரத்தில் மும்பை அணி தனது மீதமுள்ள இரண்டு ஆட்டங்களிலும் தோற்க வேண்டும். மும்பை அணிக்கு பெங்களூரு மற்றும் ஜெய்ப்பூர் அணிகளுக்கு இடையே இரண்டு ஆட்டங்கள் உள்ளன. இதில் ஏதாவது ஓர் ஆட்டத்தில் வெற்றி பெற்று சென்னை அணி தோற்றிருந்தால் மும்பை அணி ரன் விகித அடிப்படையில் அரை இறுதிக்கு தகுதி பெற்று விடும். மும்பை அணியின் ரன் விகிதம் +0.590 என்று நல்ல நிலையில் உள்ளது. ஆனால் சென்னை அணியின் ரன் விகிதம் -0.241 என்று பரிதாபகரமாக உள்ளது. இனி வரக்கூடிய மூன்று நாட்களின் முடிவுகளும் மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப் படுகின்றன.



நேற்று நடைபெற்ற இரண்டு ஆட்டங்களில் பெங்களூரு அணி ஹைதராபாத்தையும், கொல்கத்தா அணி மொகாலி அணியையும் தோற்க்கடித்தத



மொகாலி அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா யுவ்ராஜூடன்



அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் 52 ஆட்டங்களின் முடிவில் நெல்லை அணி தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றது. சென்னை அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. திருச்சி மூன்றாம் இடத்தையும், இம்சையின் கும்மி XI நான்காம் இடத்தையும் பெற்றுள்ளன.

Saturday, May 24, 2008

மார்ஷின் மந்திரம் தொடர்கின்றது - மொகாலி வெற்றி - IPL கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ் மற்றும் சங்ககாராவின் அபார ஆட்டத்தால் மொகாலி அணி தனது ஒன்பதாவது வெற்றியை பதிவு செய்தது. ஐ.பி.எல். டுவென்டி 20 கிரிக்கெட் தொடரில் மொகாலியில் நடைபெற்ற போட்டியில் யுவராஜ்சிங் தலைமையிலான மொகாலி அணியும், கில்கிறிஸ்ட் தலைமையிலான
ஹைதராபாத் அணியும் மோதியதில்
மொகாலி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மொகாலி அணி டாஸ் வென்று பீல்டிங் செய்ததை தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் கில்கிரிஸ்ட் மற்றும் ரோகித் சர்மா இருவரும் தலா 50 ரன்கள் எடுத்தனர். 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய மொகாலி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மார்ஷ் 60 ரன்களும், சங்ககாரா 25 பந்துகளில் 50 ரன்களும் எடுத்தனர்.


அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் 48 ஆட்டங்களின் முடிவில் நெல்லை அணி தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றது. சென்னை அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. திருச்சி மூன்றாம் இடத்தையும், இம்சையின் கும்மி XI நான்காம் இடத்தையும் பெற்றுள்ளன.

Friday, May 23, 2008

இலவச கொத்தனாருக்கு படம் காட்டப் போறோம்

சமீபத்தில் கிரிக்கெட் ரசிகனின் ஒரு பதிவில் மும்பை அணியின் ஒருதலைபட்சமான ஆட்ட ரசிப்பை பற்றி யுவராஜ் சிங்கின் விரக்தியான பேச்சு பற்றி பதிவு வந்தது. கிரிக்கெட்டில் எந்த அணி ஆடினாலும் சிறப்பாக செயல்படும் போது அதை பாராட்டுவதும், ரசித்து ஆரவாரம் செய்வதும் உண்மையான ரசிகர்களுக்கான பண்பாடு. அருகில் உள்ள மாநிலத்தின் அணி, அதில் விளையாடுபவர்களில் பெரும்பாலானவர்கள் இந்திய அணியைச் சார்ந்தவர்கள் என்னும் நிலையில், கிரிக்கெட் ஆட்டத்தை ரசிக்காமல், தங்களது அணிக்கு மட்டுமே ஒருதலை சார்பாக ஆதரவளித்தது வருத்தப்பட வேண்டியது தான்.

இந்த விடயத்தில் வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது என்பதற்கே இந்த படக்காட்சி. இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் எதிரான ஆட்டம் என்பது ஒரு போர்க்களம் போல தான் இருக்கும். ஆனால் சென்னையில் மட்டும் அது வேறுபடும். சையத் அன்வர் உலக சாதனை நிகழ்த்திய (194 ரன்கள்) அந்த சாதனையை சென்னை மக்கள் எப்படி பாராட்டினார்கள் என்பதையும், அதை ஏற்றுக் கொண்டு மகிழ்ந்த அன்வரையும் இந்த படக்காட்சியில் காணுங்கள். (இரண்டு நிமிடத்திற்கும் குறைவானதே)



டிஸ்கி : தலைப்பு சும்மா லுலுலுவா. சென்ஷி மட்டும் தான் கொத்ஸை வைத்து தலைப்பு வைப்பாரா? நாங்கள் வைக்க மாட்டமா? :))))))))

மழையால் கொல்கத்தா முழுமையாக வெளியேறியது - IPL கிரிக்கெட்

IPL கிரிக்கெட்டில் இன்று நடைபெறுவதாய் இருந்த கொல்கத்தா - டெல்லி அணிகளுக்கு இடையேயான T20 ஆட்டம் மழையின் காரணமாக முழுவதும் ரத்து செய்யப்பட்டது. இதனால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வீதம் கிடைத்துள்ளது. இதன் மூலம் மொகாலி அணி அரை இறுதிக்கு தகுதி பெற்று விட்டது. கொல்கத்தா அணி முற்றிலுமாக IPL கிரிக்கெட்டின் அரை இறுதியில் இருந்து வெளியேறி விட்டது. டெல்லி அணி நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இனி மீதமுள்ள ஆட்டங்களின் முடிவுகள் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.




அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் 47 ஆட்டங்களின் முடிவில் நெல்லை அணி தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றது. சென்னை அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. திருச்சி மூன்றாம் இடத்தையும், இம்சையின் கும்மி XI நான்காம் இடத்தையும் பெற்றுள்ளன.

Thursday, May 22, 2008

பரபரப்பான இரண்டு ஆட்டங்களில் பெங், மொகாலி வெற்றி - IPL கிரிக்கெட்

21-05-2008 அன்று நடைபெற்ற இரண்டு IPL கிரிக்கெட் ஆட்டங்களும் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக அமைந்திருந்தது. அதன் முதல் ஆட்டத்தில் மொகாலி அணியும் மும்பை அணியும் மோதின. தொடர்ச்சியாக ஆறு ஆட்டங்களை வென்றிருந்த மும்பை அரை இறுதிக்கு தகுதி பெற இந்த ஆட்டம் முக்கியமானதாக இருந்தது. முதலில் பேட் செய்த மொகாலி அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் மார்ஷ் 89 ரன்களும், போமர்பேச் 79 ரன்களும் எடுத்தனர். இதைத் தொடர்ந்து ஆடிய மும்பை அணி 20 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 188 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மொகாலி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. (யுவராஜின் விரக்தி பார்க்க )

மற்றொரு ஆட்டத்தில் சென்னை அணியும், அரை இறுதிக்கு தகுதி பெற முடியாத பெங்களூரு அணியும் மோதின். முதலில் ஆடிய பெங்களுரு அணியின் பேட்டிங் மோசமாக இருந்தது. அந்த அணி 20 ஓவரில் 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராகுல் திராவிட் அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூரு அணியின் கும்ப்ளே 3 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.



அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் 46 ஆட்டங்களின் முடிவில் நெல்லை அணி தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றது. சென்னை அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. திருச்சி மூன்றாம் இடத்தையும், இம்சையின் கும்மி XI நான்காம் இடத்தையும் பெற்றுள்ளன.

IPL கிரிக்கெட்- அரை இறுதியில் யார்? புள்ளிகள் பட்டியல்

பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ள IPl கிரிக்கெட்டில் அரை இறுதிக்கு தேர்வு பெறும் அணிகள் எவையென இன்னும் தெளிவாக தெரியவில்லை. பெங்களுரு மற்றும் ஹைதராபாத் அணிகள் வெளியேறி விட்ட சூழலில் ஜெய்ப்பூர் மற்றும் மொகாலி அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறுகின்றன. கொல்கத்தா அணி கிட்டத்தட்ட வெளியேறும் நிலையை எட்டி விட்டது. மீதி இரண்டு அணிகளுக்கான போட்டியில் மும்பை, டெல்லி மற்றும் சென்னை அணிகள் உள்ளன. சென்னை அணிக்கு இன்னும் இரண்டு ஆட்டங்களில் ஒரு வெற்றி கிடைத்தால் போதும். மும்பை அணிக்கு மூன்று ஆட்டங்களில் இரண்டு வெற்றியும், டெல்லி அணிக்கு இரண்டு ஆட்டங்களிலும் வெற்றியும், கொல்கத்தா அணியின் தோல்வியும் தேவைப்படுகின்றது.
21-05-2008 க்குப் பிறகு புள்ளிகள் பட்டியல்

Wednesday, May 21, 2008

மும்பை கிரிக்கெட் ரசிகர்கள் - யுவராஜ் சிங் விரக்தி

IPL கிரிக்கெட் உச்சகட்டத்தை எட்டி விட்டது. பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறவில்லை. இந்நிலையில் இன்று நடைபெற்ற மும்பை - மொகாலிக்கு இடையேயான ஆட்டம் மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. இறுதி ஓவரில் ஒரு ரன் வித்தியாசத்தில் மொகாலி அணி வெற்றி பெற்றது.



இதைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய மொகாலி அணியின் தலைவர் யுவராஜ் சிங் மும்பை ரசிகரை சாடிப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. யுவராஞ் சிங் பேசும் போது ” மும்பை ரசிகர்கள் இன்று மிகவும் ஒருதலைப்பட்சமாக மும்பை அணிக்கு ஆதரவாக நடந்து கொண்டனர். இதை அவர்களுக்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன. இந்திய அணியில் விளையாடக் கூடிய வீரர்களும் மொகாலி அணியில் இருக்கிறோம் என்ப்தை மறந்து விடக்கூடாது” என்று கூறினார்.

Monday, May 19, 2008

ஷாருக்கானுக்கு தடை : ஐ.சி.சி., அதிரடி


கோல்கட்டா : கோல்கட்டா அணியின் உரிமையாளர் ஷாருக்கான், வீரர்கள் ஓய்விடத்திற்கு அல்லது உடைமாற்றும் இடத்திற்கு செல்லக்கூடாது என ஐ.சி.சி., ஊழல் தடுப்பு கமிட்டி தடை விதித்துள்ளது. இந்த முடிவு மிகவும் ஏமாற்றமளிப்பதாக உள்ளது என ஷாருக்கான் கூறியுள்ளார். தற்போது நடந்து வரும் ஐ.பி.எல்., கிரிக்கெட்டில் கோல்கட்டா அணியை ஏலத்தில் எடுத்து இருப்பவர் ஷாருக்கான். கோல்கட்டா அணி விளையாடும் போட்டிகளின் போது எப்போதும் உடன் இருந்து வீரர்களை உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பார். அவரின் இந்தச் செயலுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு கமிட்டி தடை விதித்துள்ளது. நேற்று சென்னை அணிக்கெதிராக நடந்த போட்டியில், ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக வீரர்கள் தங்கியுள்ள அறைக்கு ஷாருக்கான் சென்றதாக தெரிகிறது. ஐ.சி.சி., விதிகளின் படி கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருக்கும் அறை அல்லது ஓய்வு எடுக்கும் இடத்திற்கு வேறு யாரும் செல்லக்கூடாது. இது 'மேட்ச் பிக்சிங்' கிற்கு வழிவகுக்கும் என்பதால் அவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் மீதமுள்ள போட்டிகளில் ஷாருக்கான் வீரர்களுடன் சேர்ந்து இருக்கக்கூடாது என, ஐ.சி.சி., ஊழல் தடுப்பு கமிட்டி தடை விதித்துள்ளது. இந்திய கிரிக்கெட் போர்டும் ஐ.சி.சி., விதிகளை கட்டாயம் பின்பற்றுமாறு அவருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஷாருக்கான், தான் இயல்பாகவே கிரிக்கெட்டில் ஆர்வத்துடன் இருப்பதாலும், எப்போதும் கிரிக்கெட் வீரர்களுடன் இருப்பதை விரும்புவதாலும், ஐ.சி.சி.,யின் அறிவிப்பு தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார்.

Friday, May 16, 2008

IPL கிரிக்கெட் - மிஸ்ரா ஹாட்ரிக் - டெல்லி வெற்றி

13-05-2008 அன்று நடைபெற்ற IPL கிரிக்கெட்டின் 37 வது ஆட்டத்தில் டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் மோதின. முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 194 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கம்பீர் பட் அதிகபட்சமாக 79 ரன்களும், தவான் 68* ரன்களும் எடுத்தனர். இதைத் தொடர்ந்து ஆடிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் 9 விக்கெட்களை இழந்து 182 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணியின் மிஸ்ரா அபாரமாக பந்து வீசி ஹாட்ரிக்குடன் 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் தொடர்ந்து 4 தோல்விகளைத் தழுவிய டெல்லி அணி அதில் இருந்து மீண்டுள்ளது. ஏற்கனவே சென்னை அணியின் பாலாஜி ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியது நினைவிருக்கலாம். அது பற்றிய பதிவு.

ஹாட்ரிக் எடுத்த மிஸ்ரா

அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் 37 ஆட்டங்களின் முடிவில் நெல்லை அணி தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றது. சென்னை அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. திருச்சி மூன்றாம் இடத்தையும், இம்சையின் கும்மி XI நான்காம் இடத்தையும் பெற்றுள்ளன.

தமிழ் கிரிக்கெட் ஸ்கோர் போர்டு

Tuesday, May 13, 2008

அக்தரின் அசத்தல் வருகை - கொல்கத்தா வெற்றி

13-05-2008 அன்று நடைபெற்ற IPl கிரிக்கெட்டின் 35 வது ஆட்டத்தில் டெல்லி அணியும், கொல்கத்தா அனியும் மோதின. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்களை இழந்து 133 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சல்மான் பட் அதிகபட்சமாக 48 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து ஆடிய டெல்லி அணி 18 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணியில் முதல் முறையாக களம் கண்ட சொயிப் அக்தர் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார். சுக்லா கடைசி நேரத்தில் 6 ரன் மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்களை வீழ்த்தினார். சொயிப் அக்தர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.


அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் 35 ஆட்டங்களின் முடிவில் நெல்லை அணி தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றது. சென்னை அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. திருச்சி மூன்றாம் இடத்தையும், இம்சையின் கும்மி XI நான்காம் இடத்தையும் பெற்றுள்ளன.

Monday, May 12, 2008

தோல்வியே தொடர்கதையாய் பெங்களூரு - IPL கிரிக்கெட்

ஐ.பி.எல். டுவென்டி 20 கிரிக்கெட் தொடரில் சண்டிகரில் நடைபெற்ற 34 வது போட்டியில் டிராவிட் தலைமையிலான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியும், யுவராஜ்சிங் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதியதில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்று களமிறங்கிய பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன் எடுத்தது. அந்த அணியின் பெளச்சர் 39 ரன்கள் எடுத்தார். ஸ்ரீசாந்த் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்து பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 15.4 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 144 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் மார்ஷ் 74 ரன்களை எடுத்து ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். பெங்களுரு அணியின் தோல்விகள் தொடர்கின்றன.





அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் 34 ஆட்டங்களின் முடிவில் நெல்லை அணி தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றது. சென்னை அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. திருச்சி மூன்றாம் இடத்தையும், இம்சையின் கும்மி XI நான்காம் இடத்தையும் பெற்றுள்ளன.


Sunday, May 11, 2008

IPL கிரிக்கெட் - சென்னை வெற்றி - பாலாஜி ஹாட்ரிக் சாதனை

ஐ.பி.எல். டுவென்டி 20 கிரிக்கெட் தொடரில் சென்னையில் நடைபெறும் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், யுவராஜ்சிங் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதியதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஹாட்ரிக் சாதனை: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்று பீல்டிங் செய்ததை தொடர்ந்து, களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன் எடுத்தது. சென்னை அணியின் பத்ரிநாத் 64 ரன்களும், தோனி 60 ரன்களும் எடுத்தனர்.அதனை தொடர்ந்து பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 163 ரன் எடுத்து தோல்வியடைந்தது. அந்த அணியின் மார்ஷ் மட்டும் அதிகபட்சமாக 58 ரன்கள் எடுத்தார். இர்பான் பதான் 18 பந்துகளில் 40 ரன்கள் அடுத்தார். பாலாஜி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். கடைசி நேரத்தில் தொடர்ந்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இவர் ஹாட்ரிக் சாதனை படைத்தார். பாலாஜி 4 ஓவரில் 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். IPL கிரிக்கெட்டில் இது முதல் ஹாட்ரிக் என்பது குறிப்பிடத்தக்கது.


அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் 31 ஆட்டங்களின் முடிவில் நெல்லை அணி தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றது. சென்னை அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. திருச்சி மூன்றாம் இடத்தையும், இம்சையின் கும்மி XI நான்காம் இடத்தையும் பெற்றுள்ளன.

Saturday, May 10, 2008

09-05-2008 IPL கிரிக்கெட் - ஜெய்ப்பூர் முதலிடம்

ஐ.பி.எல். டுவென்டி 20 கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூரில் நடைபெறும் போட்டியில் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் மோதியதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பீல்டிங் செய்ததை தொடர்ந்து, களமிறங்கிய டெக்கான் சார்ஜர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 141 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஒரு விக்கெட்டை வீழ்த்தி 37 பந்துகளில் 68 ரன்கள் எடுத்த யூசுப் பதான் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். இதுவரை ஆடிய 8 ஆட்டங்களில் 6 ல் வெற்றி பெற்ற ஜெய்ப்பூர் அணி பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.


அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் 30 ஆட்டங்களின் முடிவில் நெல்லை அணி தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றது. சென்னை அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. திருச்சி மூன்றாம் இடத்தையும், இம்சையின் கும்மி XI நான்காம் இடத்தையும் பெற்றுள்ளன.

Friday, May 9, 2008

IPL கிரிக்கெட் திரில்லிங்கான ஆட்டங்கள் - 08-05-2008

ஐ.பி.எல்., தொடரின் பரபரப்பான லீக் போட்டியில் அசத்தலாக ஆடிய தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் "திரில்' வெற்றி பெற்றது. சேவக்கின் டில்லி டேர்டெவில்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து மகத்தான எழுச்சி கண்டது. சேவக் அணி சார்பில் அரைசதம் கடந்த காம்பிர், தவான் ஆகியோரது ஆட்டம் வீணானது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பீல்டிங் செய்ததை தொடர்ந்து, பேட்டிங் செய்த டில்லி டேர்டெவில்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகன் விருது டோனிக்கு வழங்கப்பட்டது. (இது பற்றிய பதிவு)



கோல்கட்டா : ஐ.பி.எல். டுவென்டி 20 கிரிக்கெட் தொடரில் கோல்கட்டாவில் நடைபெற்ற போட்டியில் கங்குலி தலைமையிலான கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியும், டிராவிட் தலைமையிலான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியும் மோதியதில் கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மழையின் காரணமாக 16 ஓவர் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், டாஸ் வென்ற கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 129 ரன் எடுத்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 124 ரன் எடுத்தது. இந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகன் விருது சவுரவ் கங்குலிக்கு வழங்கப்பட்டது.

அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் 29 ஆட்டங்களின் முடிவில் நெல்லை அணி தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றது. சென்னை அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. திருச்சி மூன்றாம் இடத்தையும், மதுரை நான்காம் இடத்தையும் பெற்றுள்ளன.

Thursday, May 8, 2008

தோனிக்கு மேன் ஆப் த மேட்ச் ------ என்னப்பா நியாயம்?

இன்று நடைபெற்ற சென்னை - டெல்லி இடையேயான IPL கிரிக்கெட்டின் ஆட்டத்தில் சென்னை வெற்றி பெற்றது. விறுவிறுப்பான ஆட்டத்தில் கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவையான நிலையில் கடைசி பந்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. இது சென்னை அணியின் ரசிகர்களுக்கு மிக்க மகிழ்ச்சியை அளித்தது. ஆனால் இந்த ஆட்டத்தில் மேன் ஆப் த மேட்ச் டோனிக்கு வழங்கப்பட்டது ஆச்சரியத்தை அளித்தது. இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிவர்களில் வித்யுத் சிவராமகிருஷ்ணன், பிளமிங், மோர்க்கல், டெல்லி அணியில் கம்பீர், தவான் என பலர் உள்ளனர். ஆனால் துவக்க ஆட்டக்காரர்களின் அசத்தலான துவக்கதை பயன்படுத்தாமல் சொதப்பலாக விளையாடி ஆட்டத்தை கடைசி வரை இழுத்தடித்த டோனிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது.

Tuesday, May 6, 2008

05-05-2008 IPL கிரிக்கெட் - பெங்களூருக்கு அடுத்த தோல்வி

ஸ்ரீசாந்த், சாவ்லா பவுலிங்கில் அசத்த பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் சொந்த மண்ணில் 126 ரன்களுக்கு ஆல்- அவுட்டாகி ஏமாற்றியது. எளிய இலக்கை சேஸ் செய்த, யுவராஜின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, இத்தொடரில் ஐந்தாவது வெற்றியை பதிவு செய்தது. டிராவிட்டின் ஆட்டம் வெற்றிக்கு உதவாமல் போனது.இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று பெங்களூருவில் நடந்த லீக் போட்டியில் டிராவிட் தலைமையிலான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி, யுவராஜை கேப்டனாக கொண்ட பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியுடன் மோதியது. "டாஸ்' வென்ற யுவராஜ் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.

ஸ்ரீசாந்த் மிரட்டல்: பெங்களூரு அணிக்கு துவக்க வீரர்களாக ஜாபர், விராத் கோஹ்லி வந்தனர். முதல் ஓவரை வீசிய ஸ்ரீசாந்த் வேகத்தில் மிரட்டினார். இதில் திணறிப்போன ஜாபர் "டக்' அவுட்டானார். அடுத்த பந்தில் கேமரூன் ஒயிட்டும்(0) "கிளீன் போல்டு' ஆக, ஸ்ரீசாந்த் உற்சாகத்தில் துள்ளினார். இந்நிலையில் காலிஸ்(0) தேவையில்லாமல் ரன்-அவுட்டாக, பெங்களூரு அணி 15 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து பரிதாபமாக காட்சியளித்தது.

டிராவிட் அரைசதம்: அடுத்து வந்த டிராவிட், கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்தார். துவக்கத்தில் நிதானமாக விளையாடிய இந்த ஜோடி அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தியது. நான்காவது விக்கெட்டுக்கு இவர்கள் 54 ரன்கள் எடுத்தநிலையில் கோஹ்லி பெவிலியன் திரும்பினார். இவர் 5 பவுண்டரிகள் உட்பட 34 ரன்கள் எடுத்தார்.

பொறுப்புடன் விளையாடிய டிராவிட் அரைசதம் பதிவு செய்து, அணியை சரிவிலிருந்து மீட்க முயன்றார். சாவ்லா அபாரம்: மிஸ்பா (8), பிரவீண் (0) விரைவில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். ஒரு சிக்சர், 9 பவுண்டரி விளாசிய டிராவிட் 51 பந்தில் 66 ரன்கள் எடுத்து அவுட்டானார். கும்ளே (3) ரன்- அவுட்டானார். பெங்களூரு அணி 19.2 ஓவரில் 126 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. பஞ்சாப் அணி சார்பில் சாவ்லா 3, ஸ்ரீசாந்த் 2 விக்கெட் வீழ்த்தினர்.

சர்வான் அசத்தல்: இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஹோப்ஸ்(5) விரைவில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த சர்வான், மார்சுடன் ஜோடி சேர்ந்தார். கலக்கலாக பேட் செய்த சர்வான், ஸ்டைன் பந்தில் இமாலய சிக்சர் அடித்து அசத்தினார். பின்னர் ஜாகிர் ஓவரில் வரிசையாக இரண்டு பவுண்டரிகள் அடித்தார். இதையடுத்து கேப்டன் டிராவிட் பந்துவீச்சில் மாற்றம் கொண்டு வந்தார். ஆனால், அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.

யுவராஜ் "1': பிரவீண் வீசிய 5வதுஓவரில் சர்வான் ஒரு பவுண்டரி, மார்ஷ் ஒரு சிக்சர் என அதிரடி காட்டினர். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்தநிலையில் சர்வான், பிரவீண் பந்தில் அவுட்டானார். இவர் ஒரு சிக்சர், 4 பவுண்டரி உட்பட 31 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த கேப்டன் யுவராஜ் (1) இம்முறை சோபிக்கவில்லை. மார்ஷ் 39 ரன்களுக்கு(ஒரு சிக்சர், 4 பவுண்டரி) அவுட்டானார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 18.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் 25 ஆட்டங்களின் முடிவில் நெல்லை அணி தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றது. திருச்சி அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. சென்னை மூன்றாம் இடத்தையும், மதுரை நான்காம் இடத்தையும் பெற்றுள்ளன

Sunday, May 4, 2008

பரபரப்பான ஆட்டங்களில் பெங்களுரூ, மொகாலி வெற்றி - IPL தமிழ் கிரிக்கெட் நெல்லை முன்னிலை

பெங்களூரு: டிராவிட் தலைமையிலான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கும், லட்சுமண் தலைமையிலான ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி இடையே பெங்களூருவில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெக்கான் சார்ஜர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன் எடுத்தது. கில்கிறிஸ்ட் 10; கிப்ஸ் 5; ஆர்.ஜி. சர்மா 57; அப்ரிடி 1; லட்சுமண் 52 ; ஸ்டைரிஸ் 2 ரன் எடுத்து அவுட் ஆயினர். பி. குமார் 3 விக்கெட்டுகளையும், ஜகிர்கான் 2 விக்கெட்டுகளையும், காலிஸ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். முன்னதாக ஆடிய ராயல் சாலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 156 ரன் எடுத்தது. பரத் சிப்லி 10; வாசிம் 44; காலிஸ் 6; கோஹ்லி 38; மிஸ்பா உல் ஹக் 3; புச்சர் 16; பிரவீண் குமார் 8; டிராவிட் 26 ரன் எடுத்து அவுட் ஆயினர். ஆர்.பி.சிங் 3 விக்கெட்டுகளையும் ஓஜா 2 விக்கெட்டுகளையும் ஸ்டைரிஸ், அப்ரிடி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.


வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பெங்களூரு அணியினர்

மொகாலி : ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், மொகாலியில் யுவராஜ் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், கங்குலியின் தலைமையிலான கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியும் விளையாடியதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 9 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன் எடுத்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன் எடுத்தது. 24 ரன்கள் எடுத்ததுடன், அபாரமாக பந்து வீசி 2 விக்கெட்களையும் வீழ்த்திய இர்பான் பதான் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் 22 ஆட்டங்களின் முடிவில் நெல்லை அணி தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றது. அதை தொடர்ந்து பல நாட்களாக இரண்டாவது இடத்தை பெற்று வந்த மதுரை அணியை வீழ்த்தி திருச்சி அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. சென்னை மூன்றால் இடத்தையும், மதுரை நான்காம் இடத்தையும் சில புள்ளிகள் வித்தியாசத்தில் பெற்றுள்ளன.

22 ஆட்டங்களின் முடிவில் தமிழ் கிரிக்கெட் ஸ்கோர் போர்டு

Saturday, May 3, 2008

சென்னைக்கு முதல் தோல்வி - IPL கிரிக்கெட் நிலவரம்

சென்னை: ஐ.பி.எல்., தொடரில் அசைக்க முடியாத அணியாக இருந்த தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் தோல்வியை சந்தித்தது. நேற்றைய லீக் போட்டியில் டில்லி டேர்டெவில்ஸ் அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக வீழ்ந்தது. அதிரடியாக விளை யாடி வெற்றி பெற்ற கேப்டன் சேவக், தனது டில்லி அணியை முதலிடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். சென்னை அணி தற்போது இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.


இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் "டுவென்டி-20' தொடர் நாட்டின் பல்வேறு நகரங் களில் நடக்கிறது. நேற்று சென்னையில் நடந்த முக்கிய லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சேவக் கின் டில்லி டேர்டெவில்ஸ் அணியை சந்தித்தது. "டாஸ்' வென்ற தோனி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.


வந்தார் நிடினி: சென்னை அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆஸ்திரேலியாவின் ஹைடன், ஹசி மற்றும் நியூசிலாந்தின் ஓரம் ஆகியோர் தங்களது தேசிய அணிக்காக விளை யாட சென்றுவிட்டதால், பிளமிங், வித்யூத் சிவராம கிருஷ்ணன், நிடினி வாய்ப்பு பெற்றனர். பழனிக்கு பதிலாக முரளிதரன் இடம்பிடித்தார்.

மெக்ராத் அசத்தல்: துவக்க வீரர்களாக பார்த்திவ், பிளமிங் களமிறங்கினர். மிகவும் கஞ்சத்தனமாக பந்துவீசிய மெக்ராத் ஆரம்பத்திலேயே மிரட்டினார். முதல் இரண்டு ஓவர்களில் வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். ஹைடனின் இடத்தை பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கப் பட்ட பிளமிங் 13 ரன்களுக்கு மகேஷ் பந்தில் வீழ்ந்தார். பார்த்திவ் 21 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.

வித்யூத் அரைசதம்: இந்நிலையில் களமிறங்கிய கேப்டன் தோனி, வித்யூத் சிவராமகிருஷ்ணனுடன் ஜோடி சேர்ந்தார். சூப்பராக பேட் செய்த இந்த ஜோடி டில்லி பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. சேவக் வீசிய 11வது ஓவரில் இருவரும் தலா ஒரு சிக்சர் அடித்து அணியின் ஸ்கோரை விறுவிறுவென உயர்த்தினர். முன்னாள் வீரர் சிவராமகிருஷ்ணன் மகனான வித்யூத் 31வது பந்தில் அரைசதம் கடந்தார். 54 ரன்கள் எடுத்த இவர் மெக்ராத் பந்தில் அவுட்டானார்.
இதைத் தொடர்ந்து ஆடிய டெல்லி அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணியின் சேவாக், கம்பீர் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்தனர். பின்னர் வந்தவர்கள் நிதானமாக ஆடி வெற்றி இலக்கை அடைந்தனர்.


அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் 20 ஆட்டங்களின் முடிவில் நெல்லை அணி தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றது. அதை தொடர்ந்து மதுரை அணி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.

Friday, May 2, 2008

தாதாவுக்கு ஹாட்ரிக் தோல்வி - IPL தமிழ் கிரிக்கெட் - நெல்லை முன்னிலை

01-05-2008 அன்று IPL கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் சுமாரான அணியாக கருதப்பட்ட ஜெய்ப்பூர் அணியும், வலுவான அணியாக கணக்கிடப்பட்ட கொல்கத்தா அணியும் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஜெய்ப்பூர் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது. அஸ்னாத்கர் 60 ரன்களும் யூசுப் பதான் 55 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா அணியின் உமர் குல் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து பேட் செய்த கொல்கத்தா 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்த்து. அந்த அணியின் தலைவர் கங்குலி 51 ரன்கள் எடுத்தார். இந்த தோல்வி கொல்கத்தாவுக்கு தொடர்ந்து மூன்றாவது தோல்வி ஆகும். ஜெய்ப்பூருக்கு இது தொடர்ந்த நான்காவது வெற்றி ஆகும்.

ஜெய்ப்பூரின் அஸ்னாத்கர்
இரவு நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஹைதராபாத் அணியும், மொகாலி அணியும் மோதின, இதில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் 20 ஓவரில் 8 விக்கெட்களை இழந்து 164 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ரோகித் சர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 76 ரன்கள் எடுத்தார். மொகாலி அணியின் ப்யூஸ் சாவ்லா 3 விக்கெட்களையும், பதான் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து ஆடிய மொகாலி அணி 18.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மொகாலி அணியின் மார்ஷ் 86 ரன்களும், ஜெயவர்தனே 45 ரன்களும் எடுத்தனர்.

அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் 19 ஆட்டங்களின் முடிவில் நெல்லை அணி தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றது. அதை தொடர்ந்து மதுரை அணி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.

19 ஆட்டங்களின் முடிவில் தமிழ் கிரிக்கெட் ஸ்கோர் போர்டு

Thursday, May 1, 2008

30-04-08 IPL தமிழ் கிரிக்கெட் - டிராவிட் நம்பிக்கை தொடர்கிறது

30-04-2008 அன்று நடைபெற்ற IPL கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணியும், பெங்களுரூ அணியும் மோதின. முதலில் பேட் செய்த அணிடெல்லி 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியின் கவுதம் கம்பீர் 65 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து ஆடிய பெங்களுரூ அணி 20 ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுத்தது.. எனவே டெல்லி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபாரமாக பந்து வீசி 4 முக்கிய விக்கெட்களை வீழ்த்திய மெக்கிராத் ஆட்டக்காரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது பெங்களுருவின் 5 ஆட்டங்களில் நான்காவது தோல்வி ஆகும்.
ஆட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பெங்களூரு அணியின் கேப்டன் ராகுல் திராவிட் இன்னும் நம்பிக்கையுடன் இருப்பதாகவும், அணியினரின் கட்டுக் கோப்பான ஆட்டம் வளர்ந்து வருவதாகவும் இனி வெற்றிகள் கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.


அபாரமாக பேட் செய்த கவுதம் கம்ப்பீர்


அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் 17 ஆட்டங்களின் முடிவில் நெல்லை அணி தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றது. அதை தொடர்ந்து மதுரை அணி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.

17 ஆட்டங்களின் முடிவில் ஸ்கோர் விபரம்