Sunday, May 4, 2008

பரபரப்பான ஆட்டங்களில் பெங்களுரூ, மொகாலி வெற்றி - IPL தமிழ் கிரிக்கெட் நெல்லை முன்னிலை

பெங்களூரு: டிராவிட் தலைமையிலான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கும், லட்சுமண் தலைமையிலான ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி இடையே பெங்களூருவில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெக்கான் சார்ஜர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன் எடுத்தது. கில்கிறிஸ்ட் 10; கிப்ஸ் 5; ஆர்.ஜி. சர்மா 57; அப்ரிடி 1; லட்சுமண் 52 ; ஸ்டைரிஸ் 2 ரன் எடுத்து அவுட் ஆயினர். பி. குமார் 3 விக்கெட்டுகளையும், ஜகிர்கான் 2 விக்கெட்டுகளையும், காலிஸ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். முன்னதாக ஆடிய ராயல் சாலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 156 ரன் எடுத்தது. பரத் சிப்லி 10; வாசிம் 44; காலிஸ் 6; கோஹ்லி 38; மிஸ்பா உல் ஹக் 3; புச்சர் 16; பிரவீண் குமார் 8; டிராவிட் 26 ரன் எடுத்து அவுட் ஆயினர். ஆர்.பி.சிங் 3 விக்கெட்டுகளையும் ஓஜா 2 விக்கெட்டுகளையும் ஸ்டைரிஸ், அப்ரிடி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.


வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பெங்களூரு அணியினர்

மொகாலி : ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், மொகாலியில் யுவராஜ் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், கங்குலியின் தலைமையிலான கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியும் விளையாடியதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 9 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன் எடுத்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன் எடுத்தது. 24 ரன்கள் எடுத்ததுடன், அபாரமாக பந்து வீசி 2 விக்கெட்களையும் வீழ்த்திய இர்பான் பதான் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் 22 ஆட்டங்களின் முடிவில் நெல்லை அணி தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றது. அதை தொடர்ந்து பல நாட்களாக இரண்டாவது இடத்தை பெற்று வந்த மதுரை அணியை வீழ்த்தி திருச்சி அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. சென்னை மூன்றால் இடத்தையும், மதுரை நான்காம் இடத்தையும் சில புள்ளிகள் வித்தியாசத்தில் பெற்றுள்ளன.

22 ஆட்டங்களின் முடிவில் தமிழ் கிரிக்கெட் ஸ்கோர் போர்டு

0 comments: