Friday, May 9, 2008

IPL கிரிக்கெட் திரில்லிங்கான ஆட்டங்கள் - 08-05-2008

ஐ.பி.எல்., தொடரின் பரபரப்பான லீக் போட்டியில் அசத்தலாக ஆடிய தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் "திரில்' வெற்றி பெற்றது. சேவக்கின் டில்லி டேர்டெவில்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து மகத்தான எழுச்சி கண்டது. சேவக் அணி சார்பில் அரைசதம் கடந்த காம்பிர், தவான் ஆகியோரது ஆட்டம் வீணானது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பீல்டிங் செய்ததை தொடர்ந்து, பேட்டிங் செய்த டில்லி டேர்டெவில்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகன் விருது டோனிக்கு வழங்கப்பட்டது. (இது பற்றிய பதிவு)



கோல்கட்டா : ஐ.பி.எல். டுவென்டி 20 கிரிக்கெட் தொடரில் கோல்கட்டாவில் நடைபெற்ற போட்டியில் கங்குலி தலைமையிலான கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியும், டிராவிட் தலைமையிலான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியும் மோதியதில் கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மழையின் காரணமாக 16 ஓவர் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், டாஸ் வென்ற கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 129 ரன் எடுத்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 124 ரன் எடுத்தது. இந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகன் விருது சவுரவ் கங்குலிக்கு வழங்கப்பட்டது.

அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் 29 ஆட்டங்களின் முடிவில் நெல்லை அணி தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றது. சென்னை அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. திருச்சி மூன்றாம் இடத்தையும், மதுரை நான்காம் இடத்தையும் பெற்றுள்ளன.

0 comments: