Tuesday, September 23, 2008

ஜனவரி 2009 ல் இந்திய கிரிக்கெட் அணி பாக் செல்கின்றது

இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள் ஆட்டம் மற்றும் ஒரு 20-20 ஆட்டங்களில் ஆடுவதற்காக இந்திய அணி வரும் 2009 ஜனவரியில் பாகிஸ்தானில் பயணம் மேற்கொள்கின்றது.

சமீப காலங்களில் பாகிஸ்தானில் வன்முறைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில அணிகள் பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்து விட்டன.

இந்நிலையில் இந்திய அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்ட விபரம்

Friday, September 12, 2008

2008 ICC விருதுகள் - கடும் சர்ச்சையைக் கிளப்புகின்றது

சமீபத்தில் நடந்த ICC யின் விருதுகள் வழங்கும் விழாவில் தோனி, யுவராஜ், சந்தர்பால் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்த விருதுகள் அனைத்தும் ஆகஸ்ட் 9 2007 முதல் ஆகஸ்ட் 12 2008 வரையிலான கால அள்வில் நடைபெற்ற ஆட்டங்களை மையமாக வைத்து வழங்கப்பட்டுள்ளன.


சர்ச்சை 1 - ஒருநாள் பட்டியல்
ஒருநாள் ஆட்டக்காரர்கள் பட்டியலில் தோனிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. தோனி 39 ஆட்டங்களில் 49.92 ரன் விகிதத்தில் 1298 ரன்களும், 46 கேட்ச்களும், 16 ஸ்டம்பிங்களும் செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து சச்சின் (29 ஆட்டங்களில் 46.78 விகிதத்தில் 1310 ரன்களும்) இருந்தார். இந்நிலையில் ஒருநாள் வீரர்களுக்கான பட்டியலில் சச்சின், தோனி உள்ளிட்டோரின் பெயர் இடம்பெற்றுள்ளது. ஆனால் 27 ஆட்டங்களில் 68.29 ரன்கள் விகிதத்தில் 1161 ரன்கள் எடுத்து முன்னணியில் இருந்த பாகிஸ்தானின் முகமது யூஸூப் அந்த பட்டியலில் இடம் பெறவில்லை. 15 ஆட்டங்களில் 45 சராசரியுடன் 675 ரன்கள் மட்டுமே எடுத்த ஹர்சல் கிப்ஸ், 21 ஆட்டங்களில் 42 சராசரியுடன் 718 ரன்கள் எடுத்த ரிக்கி பாண்டிங், 24 ஆட்டங்களில் 49 சராசரியுடன் 1099 ரன்கள் எடுத்துள்ள யூனுஸ் கான், 23 ஆட்டங்களில் 45 சராசரியுடன் 780 ரன்கள் எடுத்துள்ள சைமண்ட்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். யூசூபின் ஸ்ட்ரைக் ரேட்டும் 83 சதவீதம் என்று நன்றாகவே இருக்கும் நிலையில் அவரது பெயர் இந்த பட்டியலில் சேர்க்கப்படாமல் இருப்பது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.



அதே போல் இலங்கையின் பர்வேஷ் மகரூப்பும் ஒருநாள் வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இவர் அந்த கால கட்டத்தில் வெறும் 7 ஆட்டங்களில் மட்டுமே விளையாடி 14 விக்கெட்களை 17.42 சராசரியில் பெற்றுள்ளார். இவரது பேட்டிங்கும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. வெறும் 45 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதுவும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. இலங்கையில் மெண்டீஸ் 20 விக்கெட்களை 8 ஆட்டங்களில் 10.25 சராசரியில் பெற்றது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சை 2 - டெஸ்ட் பட்டியல்

கடந்த ஓராண்டில் ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விக்கெட் கீப்பராக பணி செய்த சங்கக்காராவின் பெயர் விக்கெட் கீப்பருக்கான இடத்தில் இடம் பெற்றுள்ளது.

அதே போல் டெஸ்ட் பேட்ஸ்மேன் பட்டியலில் இடம் பெற்றுள்ள கெவின் பீட்டர்சன் கடந்த ஓராண்டில் 47.25 ரன் விகிதத்திலேயே ரன்களை எடுத்துள்ளார். ஆனால் டி வில்லியர்ஸ், கிளார்க், சைமண்ட்ஸ் ஆகியோர் 55 ரன் விகிதங்களுக்கும் அதிகமாக எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் பாடல்கள் - 3GP வீடியோ பார்மேட்டில் - செல் பேசிகளில் சுலபமாக பார்க்க

Thursday, September 11, 2008

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா மறுப்பால் ICC குழப்பம்

கராச்சி: சாம்பியன் டிராபி தொடரை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் நடத்த, இந்தியா மற்றும் இதர நாடுகள் சம்மத்திக்கவில்லை என்று, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தலைமை அதிகாரி சவ்கத் நக்மி தெரிவித்தார்.சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் செப்டம்பர் 12 ல் நடைபெறுவதாக இருந்தது.

பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட அணிகளின் வீரர்கள் பங்கேற்க மறுத்தனர். இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளை தவிர, இதர ஐரோப்பிய நாடுகள் இந்த போட்டியை வேறு நாட்டில் ஒத்தி வைக்க ஆலோசனை கூறின. தென் ஆப்ரிக்கா, இலங்கை போன்ற நாடுகள் தொடரை நடத்த தயார் என்று அறிவித்தன. ஐ.சி.சி தொடரை அடுத்த ஆண்டு தள்ளி வைத்து, தற்காலிகமாக தப்பித்துக் கொண்டது. துபாயில் நடைபெற்ற இரண்டு நாள் ஐ.சி.சி கூட்டத்தில், எதிர்கால கிரிக்கெட் அட்டவனை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இது குறித்து சவ்கத் நக்மி கூறியது:ஐ.சி.சி நிர்வாகம் சாம்பியன் டிராபி தொடரை ஒளிபரப்பும் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், தொடரை 13 மாதங்களுக்கு மேல் தள்ளிப்போட முடியாது. இதனால் இந்த தொடரை அக்டோபர் மாதம் நடத்தவேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தி வந்தது. ஐ.சி.சி கிரிக்கெட் அட்டவனையில் திட்டமிட்டபடி, இந்திய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு அக்டோபர் நடுவில், ஆஸ்திரேலிய அணியோடு ஏழு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்க உள்ளது. மேலும் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடரை, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தும் திட்டம் உள்ளது. இந்திய அணி பங்கேற்கும் போட்டியும், சாம்பியன்ஸ் டிராபியும், ஒரே நேரத்தில் நடக்கும் சூழ்நிலையில் உள்ளது. பி.சி.சி.ஐ நிர்வாகத்தோடு எங்களுக்கு கறுத்து வேறுபாடு எதுவும் இல்லை. சாம்பியன்ஸ் டிராபி தொடரை அக்டோபர் இரண்டாவது வாரம் நடத்துவது குறித்து, ஐ.சி.சி கூட்டத்தில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு சவ்கத் நக்மி கூறினார்.

செய்தி : தினமலர்

தமிழ் பாடல்கள் - 3GP வீடியோ பார்மேட்டில் - செல் பேசிகளில் சுலபமாக பார்க்க

ICC கிரிக்கெட் விருதுகள் 2007- தோனி, யுவராஜ் சிங்குக்கு

ஐ.சி.சி., சிறந்த ஒரு நாள் போட்டிக்கான வீரர் விருதை இந்திய கேப்டன் தோனி தட்டிச் சென்றார். "டுவென்டி-20' பிரிவில் சிறந்த வீரர் விருதை யுவராஜ் பெற்றார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின், இஷாந்த் சர்மாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

சர்வதேச கிரிக்கெட் கவுன் சில்(ஐ.சி.சி.,), ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறது. இவ்விருதுக்கு கடந்த 2007, ஆக., 9ம் தேதி முதல் 2008, ஆக. 12ம் தேதி வரையிலான வீரர்களின் செயல்பாடு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. சிறந்த வீரர்களை கிளைவ் லாயிட் தலைமையிலான 5 பேர் குழு தேர்வு செய்தது.

கிரிக்கெட் ஆஸ்கார் : கிரிக்கெட் உலகின் "ஆஸ்கார்' என போற்றப்படும் இவ்விருதுக்கு இந்திய கேப்டன் தோனியின் பெயர் ஒரு நாள் மற்றும் "டுவென்டி-20' என இரண்டு பிரிவுகளில் பரிந்துரை செய் யப்பட்டு இருந்தது. ஒரு நாள் அரங்கில் சச்சின் பெயரும் இடம் பெற்று இருந்ததால் கடும் போட்டி காணப்பட்டது.

சச்சினை முந்தினார்: இந்தச் சூழலில் நேற்று இரவு ஐ.சி.சி., விருது வழங்கும் விழா துபாயில் வண்ணமயமாக நடந்தது. இதில் ஒரு நாள் போட்டிக்கான சிறந்த வீரர் விருதை தோனி கைப்பற்றினார். ஒரு நாள் போட்டி ரேங்கிங் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இவர், விருதுக்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் 39 ஒரு நாள் போட்டிகளில் 1, 298 ரன்கள் எடுத்துள்ளார். கீப்பராக 62 விக்கெட் வீழ்ச்சிக்கு(46 கேட்ச், 16 ஸ்டம்பிங்) காரணமாக இருந்துள்ளார். இதன் அடிப்படையில் விருதை கைப்பற்றினார். ஒரு நாள் அரங்கில் மிகவும்

சிக்சர் மன்னன்:"டுவென்டி-20' பிரிவில் யுவராஜ் சிங் சாதித்தார். "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் தொடர்ந்து 6 சிக்சர்கள் விளாசிய இவர், சிறந்த "டுவென்டி-20' வீரர் விருதை கைப்பற்றினார்.

சூப்பர் மெண்டிஸ்: வளர்ந்து வரும் இளம் வீரருக்கான விருதை இலங்கையின் சுழல் நாயகன் மெண்டிஸ் பெற்றார். இப்பிரிவில் இடம் பெற்று இருந்த இந்தியாவின் இளம் இஷாந்த் சர்மா வாய்ப்பை இழந்தார்.

சந்தர்பால் அபாரம்:ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக வெஸ்ட் இண்டீசின் சந்தர்பால் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த டெஸ்ட் வீரர் விருதை தென் ஆப்ரிக்காவின் டேல் ஸ்டைன் பெற்றார். கிரிக்கெட் உணர்வை சிறப் பாக வெளிப்படுத்தியதற்கான விருதை இலங்கை அணி தொடர்ந்து இரண்டாம் முறையாக பெற்றது. சிறந்த அம்பயருக்கான விருதை ஆஸ்திரேலியாவின் சைமன் டாபெல் தொடர்ந்து 5வது முறையாக வென்றார்.

டெஸ்டில் சேவக்: ஐ.சி.சி., ஒரு நாள் போட்டிக்கான 12 பேர் அடங்கிய உலக லெவன் அணியில் சச்சின், தோனி இடம் பெற்றுள்ளனர். டெஸ்ட் அணிக்கான 12 பேரில் இந்தியா சார்பில் சேவக் மட்டும் இடம் பெற்றுள்ளார்.

செய்தி : தினமலர்

தமிழ் பாடல்கள் - 3GP வீடியோ பார்மேட்டில் - செல் பேசிகளில் சுலபமாக பார்க்க

Tuesday, September 2, 2008

ஆஸி வீரர் சைமண்ட்ஸ் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு?

மெல்போர்ன் : வங்கதேச தொடரிலிருந்து நீக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் சைமண்ட்ஸ் சர்வதேச போட்டிகளிலிருந்து விரைவில் ஓய்வு பெறுவார் என தெரிகிறது. ஆஸ்திரேலியா சென்றுள்ள வங்கதேச அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டிக்கு முன்பாக நடந்த வீரர்களின் கூட்டம் மற்றும் பயிற்சி ஆகியவற்றில் ஆஸ்திரேலிய வீரர் சைமண்ட்ஸ் கலந்து கொள்ளவில்லை. அந்நேரத்தில் அவர் டார்வின் கடற்கரையில் மீன்பிடித்து கொண்டு "ஜாலி'யாக பொழுதுபோக்கினார். இதையடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு அவரை தொடரிலிருந்து நீக்கியது. முன்னதாக 2005ல் மது அருந்திவிட்டு போட்டியில் விளையாட வந்த காரணத் துக்காக இவர் 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டார். அதன்பின்னர்


இந்தாண்டு துவக்கத்தில் நடந்த டெஸ்ட் தொடரின் போது, ஹர்பஜன் தன்னை"குரங்கு' என கேலி செய்ததாக தவறான புகார் அளித்து, சர்ச்சையில் சிக்கினார்.முதல் முறை அல்ல:தற்போது வங்கதேச தொடரிலிருந்து நீக்கப்பட்டிருப்பதால் ஓய்வு பெறும் எண்ணத்தில் இருக்கிறார். ஏற்கனவே கடந்த 2002ல் இவர் பிரிஸ்பேன் ரக்பி அணியின் பயிற்சியாளரிடம் தன்னை ரக்பி வீரராக மாற்றும்படி கேட்டுக்கொண்டார். அப்போதும் கிரிக்கெட் அணியிலிருந்து விலகும் எண்ணத்தில் இருந்தார். அடுத்த மாதம் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற் கொண்டு நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணி இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில் இவரது முடிவு முக்கியத்துவம் வாய்ந்தது. இவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு அளிக்கும் ரூ. 2 கோடி ஒப்பந்த தொகை கிடைக்காமல் போய்விடும். ஆனால், கடந்தாண்டு ஐ.பி.எல்., தொடரில் ரூ. 5.4 கோடி பெற்ற இவர் இது போன்ற போட்டிகளில் பங்கேற்கலாம்.


ஆதரவுக்கு நன்றி: இந்நிலையில் ஆஸ்திரேலிய பத்திரிகைக்கு சைமண்ட்ஸ்பேட்டியளித்த போது,""எனக்கு எது முக்கியம் என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு என்னிடம் விட்டுவிட்டது. விரைவில்சரியான முடிவை எடுக்கவிருக்கிறேன்,'' என்றார்.சைமண்ட்ஸ் விவகாரம் குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறுகையில்,""சைமண்ட்ஸ் இல்லாத ஆஸ்திரேலிய அணி முழு நிறைவுபெறாது. ஆனால், அவர் எப்போது விளையாட வருவார் என தெரியவில்லை,'' என்றார். இவரை தொடர்ந்து காயம் காரணமாக வங்கதேசதொடரில் பங்கேற்காத ரிக்கி பாண்டிங் மற்றும் பயிற்சியாளர் டிம் நீல்சன் ஆகியோரும் சைமண்ட்ஸ் மீதுஅதிருப்தியடைந்துள்ளனர்.


ஹசி நம்பிக்கை: ஆனால், மைக் ஹசி இவருக்குஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,"சைமண்ட்ஸ் சுழற்பந்து வீச்சை நன்றாக சமாளிக்ககூடியவர். அவர் மீண்டும் அணிக்கு திரும்புவார்என்ற நம்பிக்கை இருக்கிறது' என்றார்.

செய்தி : தினமலர்

தமிழ் பாடல்கள் - 3GP வீடியோ பார்மேட்டில் - செல் பேசிகளில் சுலபமாக பார்க்க

Monday, September 1, 2008

பெண்கள் கிரிக்கெட்: இந்தியாவை இங்கிலாந்து அணி வென்றது

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து பெண்கள் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஐந்து ஒருநாள் மற்றும் 'டுவென்டி-20' போட்டிகளில் விளையாடுகிறது. பாத்தில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகித்தது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் டான்டனில் நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய இந்தியாவின் சுலக்ஷனா நாயக்(0), ஜெயா சர்மா(0) என மோசமான துவக்கம் தந்தனர். அடுத்து வந்த தேவிகா பால்சிகார்(4), அமித் சர்மா(6) என தொடர்ந்து சொதப்ப, இந்திய அணி 11 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அடுத்து வந்த கேப்டன் மிதாலி ராஜ் பொறுப்புடன் ஆடி 53 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மிதாலியுடன் ஜோடி சேர்ந்த மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேற இந்திய பெண்கள் அணி 45.1 ஓவரில் 102 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இங்கிலாந்து சார்பில் ஹோலி கால்வின் 4 விக்கெட்டுகளையும், கத்தரின் புரூன்ட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

103 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து பெண்கள் அணிக்கு சராக் டெய்லர்(75), கரோலின் அட்கின்ஸ்(24) ஜோடி அருமையான துவக்கம் தந்தனர். இவர்கள் இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். இந்த ஜோடி கடைசி வரை அவுட்டாகாமல் 24.3 ஓவரில் 103 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை தேடித்தந்தனர். இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து பெண்கள் அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. துல்லியமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்தின் கத்தரின் புரூன்ட் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

செய்தி : தினமலர்

தமிழ் பாடல்கள் - 3GP வீடியோ பார்மேட்டில் - செல் பேசிகளில் சுலபமாக பார்க்க