Friday, September 12, 2008

2008 ICC விருதுகள் - கடும் சர்ச்சையைக் கிளப்புகின்றது

சமீபத்தில் நடந்த ICC யின் விருதுகள் வழங்கும் விழாவில் தோனி, யுவராஜ், சந்தர்பால் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்த விருதுகள் அனைத்தும் ஆகஸ்ட் 9 2007 முதல் ஆகஸ்ட் 12 2008 வரையிலான கால அள்வில் நடைபெற்ற ஆட்டங்களை மையமாக வைத்து வழங்கப்பட்டுள்ளன.


சர்ச்சை 1 - ஒருநாள் பட்டியல்
ஒருநாள் ஆட்டக்காரர்கள் பட்டியலில் தோனிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. தோனி 39 ஆட்டங்களில் 49.92 ரன் விகிதத்தில் 1298 ரன்களும், 46 கேட்ச்களும், 16 ஸ்டம்பிங்களும் செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து சச்சின் (29 ஆட்டங்களில் 46.78 விகிதத்தில் 1310 ரன்களும்) இருந்தார். இந்நிலையில் ஒருநாள் வீரர்களுக்கான பட்டியலில் சச்சின், தோனி உள்ளிட்டோரின் பெயர் இடம்பெற்றுள்ளது. ஆனால் 27 ஆட்டங்களில் 68.29 ரன்கள் விகிதத்தில் 1161 ரன்கள் எடுத்து முன்னணியில் இருந்த பாகிஸ்தானின் முகமது யூஸூப் அந்த பட்டியலில் இடம் பெறவில்லை. 15 ஆட்டங்களில் 45 சராசரியுடன் 675 ரன்கள் மட்டுமே எடுத்த ஹர்சல் கிப்ஸ், 21 ஆட்டங்களில் 42 சராசரியுடன் 718 ரன்கள் எடுத்த ரிக்கி பாண்டிங், 24 ஆட்டங்களில் 49 சராசரியுடன் 1099 ரன்கள் எடுத்துள்ள யூனுஸ் கான், 23 ஆட்டங்களில் 45 சராசரியுடன் 780 ரன்கள் எடுத்துள்ள சைமண்ட்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். யூசூபின் ஸ்ட்ரைக் ரேட்டும் 83 சதவீதம் என்று நன்றாகவே இருக்கும் நிலையில் அவரது பெயர் இந்த பட்டியலில் சேர்க்கப்படாமல் இருப்பது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.



அதே போல் இலங்கையின் பர்வேஷ் மகரூப்பும் ஒருநாள் வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இவர் அந்த கால கட்டத்தில் வெறும் 7 ஆட்டங்களில் மட்டுமே விளையாடி 14 விக்கெட்களை 17.42 சராசரியில் பெற்றுள்ளார். இவரது பேட்டிங்கும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. வெறும் 45 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதுவும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. இலங்கையில் மெண்டீஸ் 20 விக்கெட்களை 8 ஆட்டங்களில் 10.25 சராசரியில் பெற்றது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சை 2 - டெஸ்ட் பட்டியல்

கடந்த ஓராண்டில் ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விக்கெட் கீப்பராக பணி செய்த சங்கக்காராவின் பெயர் விக்கெட் கீப்பருக்கான இடத்தில் இடம் பெற்றுள்ளது.

அதே போல் டெஸ்ட் பேட்ஸ்மேன் பட்டியலில் இடம் பெற்றுள்ள கெவின் பீட்டர்சன் கடந்த ஓராண்டில் 47.25 ரன் விகிதத்திலேயே ரன்களை எடுத்துள்ளார். ஆனால் டி வில்லியர்ஸ், கிளார்க், சைமண்ட்ஸ் ஆகியோர் 55 ரன் விகிதங்களுக்கும் அதிகமாக எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் பாடல்கள் - 3GP வீடியோ பார்மேட்டில் - செல் பேசிகளில் சுலபமாக பார்க்க

1 comments:

said...

ஆனால் சர்வதேச விகெட்காப்பாளர்களில் யாரும் அணிக்குள் தங்களை நிலை நிறுத்தவில்லை. அத்துடன் சங்கக்கார மட்டுமே ஓட்டங்களை இந்தக் காலப் பகுதியில் குவித்த ஒரே விக்கெட் காப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. டோனி,பௌச்சர் கூட சொதப்பியுள்ளனர். (டெஸ்ட் போட்டிகளில்)