Thursday, September 11, 2008

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா மறுப்பால் ICC குழப்பம்

கராச்சி: சாம்பியன் டிராபி தொடரை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் நடத்த, இந்தியா மற்றும் இதர நாடுகள் சம்மத்திக்கவில்லை என்று, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தலைமை அதிகாரி சவ்கத் நக்மி தெரிவித்தார்.சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் செப்டம்பர் 12 ல் நடைபெறுவதாக இருந்தது.

பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட அணிகளின் வீரர்கள் பங்கேற்க மறுத்தனர். இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளை தவிர, இதர ஐரோப்பிய நாடுகள் இந்த போட்டியை வேறு நாட்டில் ஒத்தி வைக்க ஆலோசனை கூறின. தென் ஆப்ரிக்கா, இலங்கை போன்ற நாடுகள் தொடரை நடத்த தயார் என்று அறிவித்தன. ஐ.சி.சி தொடரை அடுத்த ஆண்டு தள்ளி வைத்து, தற்காலிகமாக தப்பித்துக் கொண்டது. துபாயில் நடைபெற்ற இரண்டு நாள் ஐ.சி.சி கூட்டத்தில், எதிர்கால கிரிக்கெட் அட்டவனை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இது குறித்து சவ்கத் நக்மி கூறியது:ஐ.சி.சி நிர்வாகம் சாம்பியன் டிராபி தொடரை ஒளிபரப்பும் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், தொடரை 13 மாதங்களுக்கு மேல் தள்ளிப்போட முடியாது. இதனால் இந்த தொடரை அக்டோபர் மாதம் நடத்தவேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தி வந்தது. ஐ.சி.சி கிரிக்கெட் அட்டவனையில் திட்டமிட்டபடி, இந்திய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு அக்டோபர் நடுவில், ஆஸ்திரேலிய அணியோடு ஏழு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்க உள்ளது. மேலும் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடரை, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தும் திட்டம் உள்ளது. இந்திய அணி பங்கேற்கும் போட்டியும், சாம்பியன்ஸ் டிராபியும், ஒரே நேரத்தில் நடக்கும் சூழ்நிலையில் உள்ளது. பி.சி.சி.ஐ நிர்வாகத்தோடு எங்களுக்கு கறுத்து வேறுபாடு எதுவும் இல்லை. சாம்பியன்ஸ் டிராபி தொடரை அக்டோபர் இரண்டாவது வாரம் நடத்துவது குறித்து, ஐ.சி.சி கூட்டத்தில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு சவ்கத் நக்மி கூறினார்.

செய்தி : தினமலர்

தமிழ் பாடல்கள் - 3GP வீடியோ பார்மேட்டில் - செல் பேசிகளில் சுலபமாக பார்க்க

0 comments: