Tuesday, September 2, 2008

ஆஸி வீரர் சைமண்ட்ஸ் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு?

மெல்போர்ன் : வங்கதேச தொடரிலிருந்து நீக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் சைமண்ட்ஸ் சர்வதேச போட்டிகளிலிருந்து விரைவில் ஓய்வு பெறுவார் என தெரிகிறது. ஆஸ்திரேலியா சென்றுள்ள வங்கதேச அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டிக்கு முன்பாக நடந்த வீரர்களின் கூட்டம் மற்றும் பயிற்சி ஆகியவற்றில் ஆஸ்திரேலிய வீரர் சைமண்ட்ஸ் கலந்து கொள்ளவில்லை. அந்நேரத்தில் அவர் டார்வின் கடற்கரையில் மீன்பிடித்து கொண்டு "ஜாலி'யாக பொழுதுபோக்கினார். இதையடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு அவரை தொடரிலிருந்து நீக்கியது. முன்னதாக 2005ல் மது அருந்திவிட்டு போட்டியில் விளையாட வந்த காரணத் துக்காக இவர் 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டார். அதன்பின்னர்


இந்தாண்டு துவக்கத்தில் நடந்த டெஸ்ட் தொடரின் போது, ஹர்பஜன் தன்னை"குரங்கு' என கேலி செய்ததாக தவறான புகார் அளித்து, சர்ச்சையில் சிக்கினார்.முதல் முறை அல்ல:தற்போது வங்கதேச தொடரிலிருந்து நீக்கப்பட்டிருப்பதால் ஓய்வு பெறும் எண்ணத்தில் இருக்கிறார். ஏற்கனவே கடந்த 2002ல் இவர் பிரிஸ்பேன் ரக்பி அணியின் பயிற்சியாளரிடம் தன்னை ரக்பி வீரராக மாற்றும்படி கேட்டுக்கொண்டார். அப்போதும் கிரிக்கெட் அணியிலிருந்து விலகும் எண்ணத்தில் இருந்தார். அடுத்த மாதம் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற் கொண்டு நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணி இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில் இவரது முடிவு முக்கியத்துவம் வாய்ந்தது. இவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு அளிக்கும் ரூ. 2 கோடி ஒப்பந்த தொகை கிடைக்காமல் போய்விடும். ஆனால், கடந்தாண்டு ஐ.பி.எல்., தொடரில் ரூ. 5.4 கோடி பெற்ற இவர் இது போன்ற போட்டிகளில் பங்கேற்கலாம்.


ஆதரவுக்கு நன்றி: இந்நிலையில் ஆஸ்திரேலிய பத்திரிகைக்கு சைமண்ட்ஸ்பேட்டியளித்த போது,""எனக்கு எது முக்கியம் என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு என்னிடம் விட்டுவிட்டது. விரைவில்சரியான முடிவை எடுக்கவிருக்கிறேன்,'' என்றார்.சைமண்ட்ஸ் விவகாரம் குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறுகையில்,""சைமண்ட்ஸ் இல்லாத ஆஸ்திரேலிய அணி முழு நிறைவுபெறாது. ஆனால், அவர் எப்போது விளையாட வருவார் என தெரியவில்லை,'' என்றார். இவரை தொடர்ந்து காயம் காரணமாக வங்கதேசதொடரில் பங்கேற்காத ரிக்கி பாண்டிங் மற்றும் பயிற்சியாளர் டிம் நீல்சன் ஆகியோரும் சைமண்ட்ஸ் மீதுஅதிருப்தியடைந்துள்ளனர்.


ஹசி நம்பிக்கை: ஆனால், மைக் ஹசி இவருக்குஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,"சைமண்ட்ஸ் சுழற்பந்து வீச்சை நன்றாக சமாளிக்ககூடியவர். அவர் மீண்டும் அணிக்கு திரும்புவார்என்ற நம்பிக்கை இருக்கிறது' என்றார்.

செய்தி : தினமலர்

தமிழ் பாடல்கள் - 3GP வீடியோ பார்மேட்டில் - செல் பேசிகளில் சுலபமாக பார்க்க

0 comments: