Sunday, August 3, 2008

இலங்கையை வீழ்த்தி தொடரை சமன் செய்தது இந்தியா


காலி: காலி நகரில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் 170 ரன்கள் வித்தியாசத்தில், இந்தியா வீழ்த்தி, டெஸ்ட் தொடரை சமன் செய்தது.

காலி டெஸ்ட் போட்டியில் இந்தியா வீரேந்திரஷேவாக்கின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸில் 329 ரன்களைக் குவித்தது.

பின்னர் ஆடிய இலங்கை 292 ரன்களில் சுருட்டப்பட்டது. இதையடுத்து 37 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா தனது 2வது இன்னிங்ஸைத் தொடங்கியது. இதில், கம்பீர், ஷேவாக், ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், இந்தியா 269 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 307 ரன்கள் எடுத்தால்வெற்றி என்ற இலக்குடன் இலங்கை தனது 2வது இன்னிங்ஸைத் தொடங்கியது. ஆனால் இந்திய சுழற் பந்து வீச்சையும், வேகப்பந்து வீச்சையும் சமாளிக்க முடியாமல் இலங்கை வீரர்கள் மடமடவென சரிந்தனர்.

குறிப்பாக ஹர்பஜன் சிங் மற்றும் இஷாந்த் சர்மாவின் பந்து வீச்சு இலங்கையை முறித்துப் போட்டு விட்டது.

சமர வீரா, தில்ஷானைத் தவிர மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். சமர வீரா 67 ரன்களை சேர்த்தார். தில்ஷான் 38 ரன்கள் எடுத்தார். இறுதியில்,136 ரன்களுக்கு இலங்கையை சுருட்டி 170 ரன்களில் இந்தியா அபார வெற்றியைப் பெற்றது.

ஹர்பஜன் சிங் நான்கு விக்கெட்களையும், இஷாந்த் சர்மா 3 விக்கெட்களையும், கும்ப்ளே 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஜாகிர் கானுக்கு ஒரு விக்கெட் கிடைத்தது.

ஆட்ட நாயகனாக வீரேந்திரஷேவாக் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகளைக் கொண்ட தொடரை இந்தியா 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

0 comments: