Wednesday, August 27, 2008

ஐடியா கோப்பை- இந்திய அணி வென்றது - வாஸ் சாதனை

இந்தியா-இலங்கை இடையேயான 4-வது ஒரு நாள் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 49.4 ஓவரில் 258 ரன் எடுத்தது. இந்திய அணியின் ரெய்னா 76 ரன்களும், தோனி 71 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணியின் துசாரா 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதனைதொடர்ந்து 259 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாட தொடங்கிய இலங்கை அணி 46.3 ஓவரில் 212 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இலங்கை அணியின் ஜெயசூர்யா 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணியின் ஹர்பஜன் 3 விக்கெட்களையும், முனாப் பட்டேல், யுவராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், இதனையடுத்து இந்திய அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஐடியா கோப்பை ஒரு நாள் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது.




இந்திய அணியின் சுரேஷ் ரெய்னா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வாஸ் சாதனை

இன்றைய போட்டியில் யுவராஜ் சிங்கின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இலங்கை அணியின் சமிந்தா வாஸ் 400 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் பெற்றார்.

1 comments:

said...

அப்படியா??
வாழ்த்துக்கள் இந்திய அணிக்கு