Friday, August 29, 2008

ஐ.சி.சி., ரேங்கிங்: தோனி 'நம்பர்-1'

ஐ.சி.சி., ஒரு நாள் பேட்ஸ்மேன்களுக்கான புதிய ரேங்கிங் பட்டியலில் இந்திய கேப்டன் தோனி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நேற்று ஒரு நாள் போட்டிகளுக்கான புதிய ரேங்கிங் பட்டியலை வெளியிட்டது. பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில் இந்திய கேப்டன் தோனி முதலிடம் பிடித்துள்ளார். இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அசத்தி வரும் இவர் 803 புள்ளிகள் பெற்றுள்ளார்.

தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித் 2வது இடத்துக்கு பின்தள்ளப் பட்டுள்ளார். மூன்றாவது இடத்தை ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் தன்வசம் வைத்துள்ளார். சச்சின் 728 புள்ளிகளுடன் 9வது இடத்தை பிடித்துள்ளார். பார்ம் இல்லாமல் தவித்து வரும் யுவராஜ் 18வது, காம்பிர் 27வது இடத்தில் இருக்கின்றனர்.





பவுலர்களுக்கான ரேங்கிங்கில் முதல் மூன்று இடங்களை ஆஸ்திரேலியாவின் நாதன் பிராக்கன், நியூசிலாந்தின் வெட்டோரி, ஷேன் பாண்ட் பிடித்துள்ளனர். "டாப்-20' வீரர்கள் வரிசையில் ஜாகிர் கானை தவிர்த்து வேறு எந்த இந்திய வீரரும் இல்லை. இவர் 14வது இடத்திலிருக்கிறார்.

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை 3-1 என வென்ற போதும் இந்திய அணி (114) தொடர்ந்து 4வது இடத்திலேயே இருக்கிறது.

செய்தி : தினமலர்

0 comments: