Friday, August 8, 2008

ஒருநாள் கிரிக்கெட் - இந்திய அணி அறிவிப்பு - சச்சின், கோகிலுக்கு வாய்ப்பு

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் அடுத்த மாதம் பாகிஸ்தானில் நடக்க உள்ள சாம்பியன்ஸ் டிராபிக்கான(மினி உலககோப்பை) இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மூன்று டெஸ்ட் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இவ்விறு அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் நாளை கொழும்புவில் துவங்குகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 18ம் தேதி துவங்குகிறது. இதற்கான இந்திய வீரர்கள் தேர்வு மும்பையில் நடந்தது. ஒருநாள் போட்டிக்கான அணியின் காயம் காரணமாக கடந்த வங்கதேச தொடர் மற்றும் ஆசிய கோப்பை தொடரில் விளையாடாத சச்சின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மூத்த விரர்களான கங்குலி, டிராவிட், லட்சுமண் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை. ஐ.பி.எல்., தொடரில் ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்த விவகாரத்தால் தடை செய்யப்பட்டிருந்து ஹர்பஜன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் அறிமுக வீரராக டில்லியின் விராத் ஹோஹ்லி சேர்க்கப்பட்டுள்ளார். சுழற்சி அடிப்படையில் இஷாந்த் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு முனாப் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஸ்ரீசாந்த் நீக்கப்பட்டுள்ளார். அடுத்த மாதம் பாகிஸ்தானில் நடக்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி(மினி உலககோப்பை) தொடருக்கான இந்திய அணியும் இன்று அறிவிக்கப்பட்டது. இதில் சுரேஷ் ரெய்னா, விராத் ஹோஹ்லி, ரோகித் சர்மா, பிரவீண் குமார் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் இஷாந்த் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


அணி விவரம்: இலங்கை தொடருக்கு: தோனி(கேப்டன்), யுவராஜ்(துணை கேப்டன்), சேவக், காம்பிர், சச்சின், ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன், விராத் ஹோஹ்லி, ஜாகிர் கான், பிரவீண் குமார், ஆர்.பி. சிங், பிராயகன் ஓஜா, இர்பான் பதான், பார்த்திவ் படேல், முனாப் படேல்.


சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு: தோனி(கேப்டன்), யுவராஜ்(துணை கேப்டன்), சேவக், காம்பிர், சச்சின், ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன், விராத் ஹோஹ்லி, ஜாகிர் கான், பிரவீண் குமார், ஆர்.பி. சிங், பிராயகன் ஓஜா, இர்பான் பதான், இஷாந்த் சர்மா.

செய்தி : தினமலர்

0 comments: