Sunday, June 1, 2008

சொதப்பிய அரை இறுதிகள் - இறுதியில் சென்னை - இராஜஸ்தான் இன்று மோதல் - IPL கிரிக்கெட்


மகிழ்ச்சியில் சென்னை அணியினர்
ஐபிஎல் டுவென்டி 20 தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தகுதி பெற்றது. மும்பையில் நடந்த முதலாவது அரை இறுதிப் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை, ராஜஸ்தான் அணி அபாரமாக ஆடி வீழ்த்தியது. மிகவும் பரபரப்பாக எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த ஆட்டம் முழுவதும் ஒரு சார்பாக இருந்தது.
இந்திலையில் IPL கிரிக்கெட்டின் இரண்டாவது அரை இறுதியில் சென்னை மற்றும் பஞ்சாப் மொகாலி அணிகள் மோதின. இதில்
டாஸ் வென்று முதலில் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ரமேஷ் பவார் அதிகபட்சமாக 28* ரன்கள் எடுத்தார். நிடினி, கோனி மற்றும் மொர்கெல் தலா 2 விக்கெட்டுகளையும், முரளிதரன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள். 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்றநிலையில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 116 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ரைய்னா மற்றும் பார்ட்தீவ் பட்டேல் இருவரும் அரை சதம் அடித்தனர். இந்த ஆட்டம் முழுவதும் சென்னை அணியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தின் நாயகன் விருது நிடினிக்கு வழங்கப்பட்டது.


ஆட்ட நாயகன் நிடினி


தனது அணியின் தோல்வியால் கவலையில் பிரீத்தி ஜிந்தா
இந்நிலையில் இறுதிப் போட்டி மும்பையில் இன்று இரவு நடக்கின்றது. இதில் சென்னை அணியும், இராஜஸ்தான் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வண்ணம் பரபரப்பாக இருக்கும் என்று நம்பலாம்.


அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் இறுதி போட்டிக்கு முன் நெல்லை அணி தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றது. சென்னை அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. திருச்சி மூன்றாம் இடத்தையும், இம்சையின் கும்மி XI நான்காம் இடத்தையும் பெற்றுள்ளன.


0 comments: