Sunday, June 8, 2008

முத்தரப்பு கிரிக்கெட் - பாக் - பங்களாதேஷ் இன்று மோதல்

மிர்பூர்:இந்தியா, பாகிஸ்தான், வங்கதேச அணிகள் மோதும் முத்தரப்பு ஒரு நாள் தொடர் இன்று மிர்பூரில் துவங்குகிறது. முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான், வங்கதேசஅணிகள் மோதுகின்றன. தொடரை வெற்றியுடன் துவக்க வேண்டும் என்ற உறுதியுடன் பாகிஸ்தானும், சொந்த மண்ணில் விளையாடும் உற்சாகத்தில் வங்கதேசமும் களமிறங்குகின்றன.

வங்கதேசத்தின் மிர்பூரில் இந்தியா, பாகிஸ் தான், வங்கதேச அணிகள் மோதும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இன்று துவங்குகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் மட்டுமே மோதும் என்பதால் ஒவ்வொரு போட்டியும் அதிகமுக்கியத்துவம் பெறுகிறது. தோனி தலைமையிலான இந்திய அணி சமீபகாலமாக அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இதில் 2006 உலக கோப்பை தொடரில் பைனலுக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா மற்றும் இலங்கைஅணிகளை வீழ்த்தி, அசத்தியது.

இளமையின் எழுச்சி: சமீபத்தில் நடந்த ஐ.பி.எல்., தொடரில் இளம் இந்திய வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடினார்கள். அனுபவ சச்சின், கங்குலி இல்லாதநிலையில் டில்லி அணிக்கு சூப்பர் துவக்கம் தந்த சேவக், காம்பிர் கூட்டணி ஆட்டத்தை துவக்கலாம். மிடில்ஆர்டரை' பலப்படுத்த ரோகித், ரெய்னா, யுவராஜ், தோனி, உத்தப்பா என வலுவான பேட்டிங் படை தயாராக இருக்கிறது. யூசுப் மற்றும் இர்பான் பதான் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் கைகொடுப்பார்கள். இஷாந்த், பிரவீண், ஆர்.பி.சிங் என பந்துவீச்சும் பலமாக இருக்கிறது. தடை காரணமாக இடம்பெறாத ஹர்பஜன் இடத்தை நிரப்ப பியூஸ் சாவ்லா, ஓஜா தயாராக இருக்கின்றனர்.

தொடருமா வெற்றிநடை: இந்நிலையில் இன்று நடக்கும் முக்கிய போட்டியில் பாகிஸ்தான், வங்கதேச அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தான் அணியில் தடை விதிக்கப்பட்ட அக்தர் மற்றும் போதை பொருள் வழக்கில் சிக்கிய ஆசிப் இடம்பெறவில்லை. தொடர்ந்து 11 ஒரு நாள் போட்டிகளில் வென்ற உற்சாகத்தில் பாகிஸ்தான் களமிறங்குகிறது. கடைசியாக சொந்த மண்ணில் நடந்த தொடரில் 50 என வங்கதேசத்தை முழுமையாக தோற்கடித்தது.

மிரட்டும் யூ' கூட்டணி: துவக்க வீரர் சல்மான் பட் அணிக்கு நல்ல துவக்கம் அமைத்து தரக்கூடியவர். யூனிஸ்யூசுப் கூட்டணி எதிரணியின் பவுலர்களுக்கு சிக்கல் தரலாம்.மிடில்ஆர்டரில்' ரன்விகிதத்தை ராக்கெட் வேகத்தில் உயர்த்த அப்ரிதி, மிஸ்பா தயாராக இருக்கின்றனர். விக்கெட் கீப்பர் அக்மலும் ரன் வேட்டைக்கு உதவுவார் என்பதால் வங்கதேச பவுலர்களுக்கு கடும் சவால் காத்திருக்கிறது.

கவனமாக விளையாடுவோம்: இத்தொடரில் வங்கதேசம் கடும் சவால் தரும் என்பதை மறுக்க முடியாது. தொடரை வெல்வதே எங்கள் குறிக்கோள் என்கிறார் பாகிஸ்தான் கேப்டன் சோயப் மாலிக். இது குறித்து அவர் கூறுகையில்,வங்கதேச அணி சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடும். இதனால் இன்றைய போட்டியில் கவனமாக செயல்படுவோம். முதல் போட்டியில் வென்று, நம்பிக்கையை அதிகரித்து கொள்வோம். நீண்ட காலமாக விளையாடி வருவதால் இங்குள்ள மைதானங்களை பற்றி நன்குஅறிவோம்,'' என்றார்.

தன்வீர் தயார்: அக்தர், ஆசிப் இல்லாதநிலையிலும் பாகிஸ்தான் பந்துவீச்சு நன்றாக இருக்கிறது. ஐ.பி.எல்., தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய தன்வீர் வேகத்தில் மிரட்ட காத்திருக்கிறார். இவருக்கு உமர் குல் நல்ல ஒத்துழைப்பு தருவார். இப்திகார் ராவ், சோகைல் கான், பவாத் ஆலம் ஆகியோர் வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளனர்.

அஷ்ரபுல் நம்பிக்கை: வங்கதேசத்தை பொறுத்தவரை எதிரணிக்கு எந்த நேரத்திலும் அதிர்ச்சி தோல்வி தரலாம். என்றாலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவிடுகிறது. இந்தாண்டு போட்டிகளில் சொல்லிக் கொள்ளும் படி செயல்படவில்லை. சமீபத்தில் நடந்த தென் ஆப்ரிக்க மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் வெற்றியை விரைவில் பறிகொடுக்காமல் இறுதிவரை போராடி ஆறுதல் அளித்தது. முஷிபூர் ரஹிம் துவக்கத்தில் சிறப்பாக விளையாடுகிறார். மோர்டசா, அப்துர் ரஹிம், சதாகத் ஹீசைன் பந்துவீச்சில் வலு சேர்க்கின்றனர்.பேட்டிங்கில் கேப்டன் அஷ்ரபுல்லை அதிகம் சார்ந்துள்ளது. இவர் ஜொலித்தால் மட்டுமே எதிரணிக்கு சவால் தரும் இலக்கை எட்ட முடியும் என்ற நிலையில் இருக்கிறது.

சிறந்த பாடம்: அஷ்ரபுல்வங்கதேச கேப்டன் அஷ்ரபுல் கூறுகையில்,பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறுவோம். முத்தரப்பு தொடர் சிறந்த பாடமாக அமையும். கடந்த கால தோல்விகளில் இருந்து தவறை திருத்திக்கொண்டு நல்ல முன்னேற்றம் கண்டுள்ளோம். எனது பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த விரும்புகிறேன். கடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும், அதிர ரன்கள் குவிக்க முடியவில்லை. சொந்த மண்ணில் விளையாட இருப்பதால், வீரர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். எதிரணியை வீழ்த்த வியூகம் வகுத்துள்ளோம். இந்த யுக்திகளை வெளிப்படையாக கூற விரும்பவில்லை,''என்றார்.

Courtesy : Dinamalar

0 comments: