Thursday, June 26, 2008

சேவாக் சதம் - பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர் கொண்டது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 299 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் சொயிப் மாலிக் 125 ரன்களும், யூனுஸ் கான் 59 ரன்களும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து 300 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடத்துவங்கிய இந்திய அணிக்கு தொடக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. கம்பீர் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் அதைத் தொடர்ந்து வந்து சுரேஷ் ரெய்னா அபாரமாக ஆடினார். அதே போல் சேவாக்கும் சிறிது நேரத்தில் தனது அதிரடி ஆட்டத்தை காட்டினார். ரெய்னா 84 ரன்களில் ஆட்டம் இழந்தார். சேவாக் அபாரமாக ஆடி 80 பந்துகளில் 100 ரன்களை எடுத்தார். அவர் 119 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் தனது அதிரடி ஆட்டத்தைக் காட்டிய யுவராஜ் சிங் 48 ரன்கள் எடுத்தார். இந்திய தனது 42.1 வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.

மற்றொரு ஆட்டத்தில் இலங்கை அணியை அமீரக அணி எதிர் கொண்டது. அதில் இலங்கை அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அனியின் மெண்டிஸ் அபாரமாக பந்து வீசி 22 ரன்களை மட்டும் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இலங்கை 290/9 50 ஓவரில்
யு.ஏ.இ 148/10 36.3 ஓவரில்

0 comments: