Tuesday, June 10, 2008

பாக் - இந்திய கிரிக்கெட் - இந்தியா சாதனை வெற்றி

மிர்பூர் : வங்கதேசத்தின் மிர்பூரில் நடைபெற்ற முத்தரப்பு தொடரின் பரபரப்பான ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின .டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் எடுத்தது. சேவாக் அதிகபட்சமாக 89 ரன்களும், கம்பீர் 62 ரன்களும், யுவராஜ் சிங் 55 ரன்களும் எடுத்தனர். சேவாக்கும், கம்பீரும் ஆரம்பத்தில் அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 21 ஓவரில் 155 ரன்கள் எடுத்தனர் . பாக் தரப்பில் உமர் குல் 3 விக்கெட்களை வீழ்த்தினார். 331 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் ஆரம்பம் முதலே இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. பிரவீன் குமாரின் அபார பந்து வீச்சில் அதன் விக்கெட்கள் சரிந்தன. மாலிக் மட்டும் அரை சதம் அடித்தார். பாகிஸ்தான் அணி 35.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை சேவாக் தட்டிச் சென்றார். இதன் மூலம் முத்தரப்பு கிரிக்கெட்டின் இறுதியில் இந்தியா மோத உள்ளது.




இந்தியாவின் சாதனை

1.பாகிஸ்தான் அணி கடைசியாக ஆடிய 12 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வென்று வைத்திருந்த சாதனையை இந்தியா இன்று முறியடித்துள்ளது.

2. பாகிஸ்தானை அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெல்வது இந்திய அணிக்கு இதுவே முதல் முறை. இதற்கு முன் 2005 ல் 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தான் சாதனையாக இருந்தது. ஆனால் பாகிஸ்தான் இந்தியாவை 2005 ல் 159 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சாதனையைக் கொண்டுள்ளது.

2 comments:

said...

மிக்க மகிழ்ச்சி

said...

ஆட்டத்துக்கு முன் பாகிஸ்தான் கோச் ஏதோ சவுண்டு உட்டார் போல?