Wednesday, June 25, 2008

தோனி, ரெய்னா சதம் இந்தியா வெற்றி! ஆசிய கோப்பை கிரிக்கெட்

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி ஹாங்கங்கை எதிர் கொண்டது. முதலில் பேட் செய்த இந்திய அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. தொடக்க ஆட்டக்காரர்கள் சேவாக் மற்றும் கம்பீர் அபாரமாக ஆடி முறையே 78, மற்றும் 51 ரன்கள் எடுத்தனர். அடுத்து வந்த தோனியும், ரெய்னாவும் ரன்களை மிக விரைவாக குவித்தனர். தோனி 96 பந்துகளில் 109* ரன்களும், ரெய்னா 68 பந்துகளில் 101 ரன்களும் குவித்தனர். 50 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் எடுத்திருந்தது.





இதனைத் தொடர்ந்து 375 ரன்களை வெற்றி இழக்காக கொண்டு ஆடத்துவங்கிய ஹாங்காங் அணியின் விக்கெட்டுகள் சீராக விழுந்து கொண்டே இருந்தன. அந்த அணி 36.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 118 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சாவ்லா 4 விக்கெட்களையும், சேவாக் இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்ற இரண்டாவது அணி என்ற பெருமையை ஆஸ்திரேலியாவுடன் பகிர்ந்து கொள்கின்றது.

0 comments: