Sunday, June 1, 2008

சென்னைக்கு இரண்டாமிடம் - IPL கிரிக்கெட் இராஜஸ்தான் சாம்பியன்

கடந்த இரண்டு மாதங்களாக பரபரப்பாக நடந்து வந்த IPL கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் இராஜஸ்தான் அணி சென்னை அணியை வென்று IPL சாம்பியன்ஷிப்பின் முதல் கோப்பையை வென்றது. கடந்த ஏப்ரல் 18 ந்தேதி முதல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் இந்தியாவில் உள்ள 8 அணிகளைக் கொண்டு Twnety 20 கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதில் சென்னை, ஜெய்ப்பூர், மொகாலி, டெல்லி,கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய அணிகள் பலகட்டங்களாக மோதின. இதில் சென்னை மற்றும் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ராஜஸ்தான் ராயல் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
இன்று நடந்த (ஜூன் 1) இறுதிப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஜெய்ப்பூர் அணி பீல்டிங்கைத் தேர்ந்த்தெடுத்தது. சென்னை அணியின் சார்பில் வித்யுத் சிவராமகிருஷ்ணனும், பார்த்திவ் பட்டேலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். வித்யுத் 16 ரன்களில் ஆட்டம் இழந்தாலும் அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா சிறப்பாக ஆடினார். பட்டேல் 38 ரன்னிலும், ரெய்னா 43 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மோர்க்கல் 16 ரன்களும், தோனி 29* ரன்களும் எடுத்தனர். ஜெய்ப்பூர் தரப்பில் யூசுப் பதான் முக்கிய தருணங்களில் 3 விக்கெட்களை வீழ்த்தி சென்னையின் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்தினார். 20 ஓவரில் இறுதியில் சென்னை அணி 5 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து 164 ரன்கள் என்ற வெற்றி இழக்கை கொண்டு ஆடத்துவங்கிய இராஜஸ்தான் அணியின் பட்டேலால் நல்ல துவக்கத்தைத் தர இயலவில்லை. அவர் 11 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து கோனி பந்தில் ஆட்டமிழந்தார். அதை அடுத்து வந்த கம்ரான் அக்மலும் விரைவில் ரன் அவுட் ஆகினார். அஸ்னோத்கர் 20 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து வந்த வாட்சனும் யூசுப் பதானும் இராஜஸ்தான் அணியை சரிவில் இருந்து மீட்டனர். வாட்சன் 28 ரன்களில் அவுட்டானார். இதை அடுத்த வந்த கைப் 11 ரன்னிலும், ஜடேஜா ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டாக ஆட்டமிழந்தனர். மற்றொரு முனையில் யூசுப் பதான் அதிரடியாக ஆடினார். அவரும் 56 ரன்களில் இரண்டு ஓவரில் 18 ரன்கள் என்ற நிலையில் ஆட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியது. 19 வது வீசிய நிடினி 10 ரன்கள் அடிக்கப்பட கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை பாலாஜி வீசினார். அதன் கடைசி பந்தில் வெற்றிக்கான ரன்னை சொகைல் தன்வீர் அடித்து இராஜஸ்தான் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.


ஆட்ட நாயகன் யூசுப் பதான்





அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் நெல்லை அணி சாம்பியன் பட்டதை வென்றது. சென்னை அணி இங்கும் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. கும்மி XI மூன்றாம் இடத்தையும், இம்சையின் திருச்சி நான்காம் இடத்தையும் பெற்றுள்ளன.

வெற்றி பெற்ற நெல்லை அணிக்கு வாழ்த்துக்கள்

3 comments:

said...

முதலிடம் பெற்ற இராஜஸ்தான் அணிக்கும், இரண்டாமிடம் பெற்ற சென்னை அணிக்கும் வாழ்த்துக்கள்

said...

மேட்ச் முடிஞ்ச பத்தாவது நிமிஷம் போஸ்ட் போட்டு தாக்கறீங்களே தலைவா!! :)

சென்னை சூப்பர் கிங்ஸ் தோத்தது வருத்தம்னாலும் Royals team deserves to win!

said...

///கப்பி பய said...

மேட்ச் முடிஞ்ச பத்தாவது நிமிஷம் போஸ்ட் போட்டு தாக்கறீங்களே தலைவா!! :)

சென்னை சூப்பர் கிங்ஸ் தோத்தது வருத்தம்னாலும் Royals team deserves to win!///
வாருங்கள் கப்பி. உண்மை தான். எனக்கு சென்னை தோற்றதால் ஏற்ப்பட்ட வலியைவிட இராஜஸ்தான் தோற்றிருந்தால் இன்னும் அதிகமாக இருந்திருக்கும். Certainly Royals team deserves to win! வருகைக்கு நன்றி கப்பி.