Saturday, October 4, 2008

பச்சாக்களிடம் பாலோ ஆனைத் தவிர்க்க போராடிய ‘ஜாம்பவான்’ ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து சர்வதேச போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்காக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி இந்திய போர்டு பிரசிடெண்ட் அணியுடன் நான்கு நாள் போட்டியில் மோதி வருகிறது. அக்டோபர் 2 ந்தேதி ஆரம்பமான இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய கிரிக்கெட் வாரிய அணி 455 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் ரோகித் சர்மா, மற்றும் விராத் கோகில் இருவரும் சதமடித்தனர். பர்த்தீவ் பட்டேல், இர்பான் பதான் இருவரும் அரை சதமடித்தனர்.

இதனை அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்கள் மளமளவென சரிந்ததன. ஹெய்டன் 20, கட்டிச் 15, பாண்டிங் 41, கிளார்க் 18, ஹட்டின் 34, கிரசியா 0, லீ 0 என தள்ளாடியது. 255 ரன்கள் எடுத்தால் பாலோ ஆனைத் தவிர்க்கலாம் என்ற நிலையில் 218 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்து பரிதாபமாகக் காட்சி அளித்தது.

ஆனாலும் ஹஸ்ஸியும், பந்து வீச்சாளர் கிளார்க்கும் இணைந்து ஆஸ்திரேலியாவை அவமானத்தில் இருந்து மீட்டனர். அவர்கள் இருவரும் கடைசி விக்கெட்டுக்கு 96 ரன்கள் எடுத்தனர்.




இதைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட்களை இழந்து 110 ரன்கள் எடுத்துள்ளது. இதையும் சேர்த்து இந்திய அணிக்கு 229 ரன்கள் முன்னிலை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2 comments:

said...

டெஸ்ட் மேட்ச்ல கலர் டிரஸ்ஸா?

said...

///நாமக்கல் சிபி said...

டெஸ்ட் மேட்ச்ல கலர் டிரஸ்ஸா?////
நல்ல படம் கிடைக்கவில்லை அதனால் தான் கலர் படம். படம் நல்லா இல்லியா சிபியாரே?