Saturday, March 22, 2008

IPL கிரிக்கெட் - கருணாநிதி, டிராவிட் கருத்து


ஐ.பி.எல் ஏலத்தில் உடன்பாடு இல்லை: கருணாநிதி


சென்னை: இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் வீரர்களை ஏலத்தில் விற்பனை செய்ததில் தனக்கு உடன்பாடு இல்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து கருணாநிதி பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், நான் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகன். விளையாட்டு வீரர்களின் விளையாட்டு திறமையை நான் மதிக்கிறேன். ஆனால் இந்திய கிரிக்கெட் போர்டின் சார்பு நிறுவனமான இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் வீரர்களை ஏலத்தில் விற்பனை செய்ததை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை என்றார்.





வீரர்கள் ஏலம் மறுபடியும் நடக்கக்கூடாது என்கிறார் டிராவிட்

சென்னை:ஐ.பி.எல் நிறுவனம் இப்போது கிரிக்கெட் வீரர்களை ஏலத்தில் விற்பனை செய்ததை போல மறுபடியும் நடக்கக்கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டிராவிட் தெரிவித்துள்ளார். வேலம்மாள் அறக்கட்டளை கல்வி நிறுவன மாணவர்களிடம் பேசுகையில் டிராவிட் கூறியதாவது: இந்திய கிரிக்கெட் போர்டின் சார்பு நிறுவனமான ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்களை ஏலத்தில் விற்றதில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்த செயல் மறுபடியும் நடக்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன். இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு வீரர்கள் ஒரே அணியாக செயல்படவேண்டும். கிரிக்கெட் வீரர்கள் தனிப்பட்ட புகழுக்காக விளையாடுவதை தவிர்த்து, ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். மாணவர்கள் இதே அணி உணர்வை படிப்பில் வெளிக்காட்டவேண்டும். ஒருங்கிணைந்து செயல்படுவதால் சந்தேகத்தை தெளிவுபடுத்தி சிறப்பாக படிக்க முடியும். விளையாட்டில் ஈடுபடுவது தலைமை பண்பை வளர்க்க உதவும். இவ்வாறு டிராவிட் கூறினார்.

செய்தி : தினமலர்

0 comments: