Sunday, March 16, 2008

ஹி!ஹி! இது கிரிக்கெட்டாக்கும் :))

மூன்று இந்தியர்களும் மூன்று பாகிஸ்தானியர்களும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைக் காண மான்செஸ்டருக்குப் புறப்பட்டார்கள். ரயிலில் பயணம் செய்வதாகத் திட்டம். ரயில்வே ஸ்டேசனுக்கு வந்த பாகிஸ்தானியர்கள் ஆளுக்கொரு டிக்கெட் வாங்க மூன்று இந்தியர்களும் சேர்ந்து ஒரேயொரு டிக்கெட் மட்டுமே வாங்கினார்கள். பாகிஸ்தானியர்களுக்கு ஆச்சரியம். அது எப்படி மூன்று பேரும் ஒரே டிக்கெட்ல பயணம் செய்ய முடியும் என்று கேட்டார் அந்த பாகிஸ்தானியர்களில் ஒருவர். நடக்கறதை வேடிக்கை பார்த்து நீயும் கத்துக்கோ என்று பதில் வந்தது இந்தியரிடமிருந்து.

எல்லோரும் ரயில் ஏறினார்கள் பாகிஸ்தானியர்கள் தங்களுக்கான இருக்கைகளுக்குச் சென்று அமர அந்த மூன்று இந்தியர்களும் ஒரு டாய்டலெட்டுக்குள் ஐக்கியிமானார்கள். ரயில் புறப்பட்ட சற்று நேரத்தில் டிக்கெட் பரிசோதகர் வந்தார். இருக்கையில் அமர்ந்திருந்தவர்களிடம் டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு கடைசியாக மூடப்பட்டிருந்த

அந்த டாய்லெட் பக்கம் வந்தார். கதவைத் தட்டிவிட்டு டிக்கெட் ப்ளீஸ் என்றார். கதவு லேசாக திறந்து. உள்ளேயிருந்து ஒரு கை மட்டும் டிக்கெட்டை நீட்ட அதை வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டார் பரிசோதகர். அடடா.. .. .. இந்தியர்கள் ரொம்ப புத்திசாலிங்கப்பா என்று வியந்த பாகிஸ்தானியர்கள் ஊருக்கு திரும்பி வரும்போது இந்த ஐடியாவைத் தாங்களும் செயல்படுத்தியே தீருவது என்று முடிவு செய்தார்கள்.

கிரிக்கெட் போட்டி முடிந்து ஊருக்குத் திரும்ப ரயில்வே ஸ்டெசன் வந்த பாகிஸ்தானியர்கள் திட்டமிட்டிருந்த ஒரேயோரு டிக்கெட் மட்டும் வாங்கினார்கள். என்ன ஆச்சரியம் .. .. .. அந்த மூன்று இந்தியர்களும் இந்த முறை ஒரு டிக்கெட் கூட வாங்கவில்லை ஒரு டிக்கெட் கூட இல்லாம எப்படிப்பா சமாளிக்கப் போறீங் என்று இவர்கள் கேட்டதற்கு நடக்கிறதை வேடிக்கை பார்த்துட்டு கத்துக்கோங் என்று அந்த பெரிய பதிலே வந்தது.

ரயிலில் ஏறிய மூன்று பாகிஸ்தானியர்களும் நேராக டாய்லெட்டுக்குள் சென்று ஐக்கியமானதும் ஒருவர் பின் ஒருவராக ரயிலில் ஏறினார்கள் இந்தியர்கள். ரயில் புறப்பட்டது. கொஞ்ச நேரம் கழித்து இன்னொரு பாத்ரூமுக்குள் இரண்டு இந்தியர்கள் உள்ளே போக .. .. .. மூன்றாவது நபர் மட்டும் அந்த பாகிஸ்தானியர்கள் இருந்த டாய்லெட் பக்கம் போனார். கதவைத் தட்டி 'டிக்கெட் ப்ளீஸ் ' என்றார் டிக்கெட் பரிசோதகரின் தோரணையில்.

##############################################

அந்த டாக்டர் சரியான கிரிக்கெட் பைத்தியம்

ஏன் ,

ஆபரேசன் தியேட்டர் வெளியே சிவப்பு லைட் பச்சை லைட் வைத்து பேசண்ட் அவுட்ன்னா சிவப்பு லைட்டை போடறார்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சரியான மக்கு சார் அந்த ஆள் கிரிக்கெட் பார்க்க இரண்டு டிக்கெட் எவனோ வித்திருக்கான் .. ..இவரும் வாங்கியிருக்காரு ..

அதுல என்ன தப்பு .. .. ,

அட் டிவி-ல மேட்ச் பார்க்கிறதுக்கான டிக்கெட்டை வாங்கியிருக்கார் சார் .. .

$$$$$$$$$$$$$

அவர் கிரிக்கெட் பைத்தியம்னு எப்படிச் சொல்றே .. .. ,

விதி விளையாடிருச்சினு சொன்னா ஸ்கோர் என்னனு கேட்கறார் .. ..

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

அகிலும் நிகிலும் நண்பர்கள். ஒரு நாள் அகில் ரொம்பக் கவலையா இருந்தான்.

என்ன விசயம் .. .. ,னு கேட்டான் நிகில் .

ஒரு பந்தயத்துல ஆயிரம் ரூபாய் தோத்துட்டேன்னான் அகில்

என்ன பந்தயம் .. ..,

இந்தியா செளத் ஆப்பிரிக்கா கிரிக்கெட் மெட்ச்சில் இந்தியா ஜெயிக்கும்னு ஐந்நூறு ரூபா பந்தயம் கட்டினேன். தோத்துட்டேன்.

சரி அது ஐந்நூறு ரூபாதானெ மீதி ஐந்நூறு ரூபா எங்க போச்சு.. ,

நான் ஹை லைட்டுக்கும் பந்தயம் கட்டினேன்.

*********************************************

நம்ம இந்திய கிரிக்கெட் டீமுக்கு ரொம்ப பிடிச்ச கொசுவர்த்தி எதுன்னு சொல்லு பார்ப்போம்

தெரியலையே

ஆல் அவுட்

((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((

ரேடியோவில் கிரிக்கெட் ரன்னிங் காமெண்டரி சொல்லிக் கொண்டிருந்தார்கள் .. சச்சின் 100 அடித்து சிறப்பாக ஆடிக்

கொண்டிருக்கிறார்.

அப்போது அங்கு வந்த போதையில் இருந்த ஒருவர் சொன்னார்.

நான் 500 அடிச்சிட்டு ஆடாம ஸ்டெடியா இருக்கேன் சச்சின் 100 அடிச்சிட்டு ஆடறான் பாரு .. ..

))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

எட்டுக்கால் பூச்சியும் ஆயிரங்கால் பூச்சியும் கிரிக்கெட் விளையாடப் போச்சாம். எட்டுக்கால் பூச்சி மட்டும் சரியான டயத்துக்கு கிரவுண்டுக்கு வந்துடுச்சாம் ஆனா ஆயிரங்கால் பூச்சி வர லேட்டாயிடுச்சு ஏன் சொல்லு .. ,

தெரியலையே

ஆயிரங்கால் பூச்சிக்கு ஷூ, கால் பேட் மாட்டவே நேரம் ஆயிடாதா .. .. ,

@#############$&&&&$$$$$$$$$$$$$$#%@^%&&*@#

எனக்கு வந்ததும் சரியில்லை வாச்சதும் சரியில்ல

ஏன் புலம்பற

என் புருசன் என்னனா குதிரை ரேஸ்ல தோத்துட்டு வர்றாரு என் பையன் கிரிக்கெட் பெட்டிங்ல தோத்துட்டு வர்றான்.

=====================================

மரணப் படுக்கையில் இருந்த என் தாத்தா முன்னாள் கிரிக்கெட் பிளேயர்னு எப்படிக் கண்டுபிடிச்சீங்,

பணத்தைக் கொடுத்ததும் அவுட் ஆயிட்டாரே


தமிழ்மணக் கிரிக்கெட் போட்டி